அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கலாசார அமைப்பான “விளக்கு` புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒவ்வோராண்டும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. இந்தவிருதில் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.
62 வயதான கவிஞர் விக்ரமாதித்யன் “ஆகாசம் நீல நிறம்`, “ஊரும் காலம்`, “உள்வாங்கும் உலகம்` உள்ளிட்ட 16 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், 7 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன
அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்