சிறுமியின் பாராட்டு

குழந்தைகளுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நூலை ஜி.கீதா ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்

Whirling Swirling Sky என்ற இந்த நூல்  நண்பர் பவா செல்லத்துரையின் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளளது,

இரண்டு வாரங்களின் முன்பாக இந்த நூலைப் படித்த ஒன்பது வயது சிறுமி சாதனா எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தாள்.

வழக்கமான எத்தனையோ மின்னஞ்சல்களுக்கு நடுவில் அவளது மெயில் என்னை மிகவும் சந்தோஷம் கொள்ள வைத்தது, எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டாக இதைக் கருதுகிறேன்.

0Shares
0