Bashō’s Phonebook என்ற சித்திரக்கவிதை தொகுப்பு ஒன்று மெயிலில் வந்திருந்தது, அதை உருவாக்கியவர் Travis Macdonald
பாஷோவின் ஜப்பானியக் கவிதைகளை எடுத்துக் கொண்டு டெலிபோன் பேடில் எந்த எழுத்திற்கு எந்த எண் கொடுக்கபட்டுள்ளதோ அதைப் போல கவிதையை டெலிபோன் மொழிக்கு உருமாற்றம் செய்திருக்கிறார்
666:555:3: 7:666:66:3 [—] 333:777:666:4:7777: 5:88:6:7:33:3: 444:66 [—]
7777:666:88:66:3: 666:333: 9:2:8:33:777[.]
இது ஒரு பாஷோவின் ஜென் கவிதை,
எழுத்து வடிவில் உள்ள கவிதையை எண் வடிவில் மாற்றி தருவது ஒரு புதுவகை கவிதைப்போக்கு என்று கூறுகிறார் மெக்டொனால்ட்,
பாஷோவை வாசிக்க மீண்டும் அவரை எழுத்து வடிவத்திற்கு மாற்ற வேண்டியது வாசகனின் வேலை
எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்
***