காக்காமுட்டை மிகச்சிறந்த திரைப்படம். நேற்றிரவு இயக்குநர் மணிகண்டனைச் சந்தித்து எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன்.
இரண்டு வருஷங்களுக்கு முன்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உடன் மணிகண்டன் என் வீட்டிற்கு வந்து புதிய திரைப்பட முயற்சிகள் குறித்து உரையாடியது நினைவிருக்கிறது.
அப்போது மணிகண்டன் தனது விண்ட் என்ற குறும்படத்தின் டிவிடியை கொடுத்து பார்க்கும்படி சொன்னார். மிகச்சிறந்த குறும்படமது.
இன்று உலகத்தரமிக்க திரைப்படம் ஒன்றை இயக்கி பெரும் வெற்றியைத் தொட்டிருக்கிறார். பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
இயக்குநர் மணிகண்டனுக்கும் தயாரிப்பாளர்களான தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
இப்படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 17.6.2015 புதன்கிழமை மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து நடைபெற உள்ளது .
இதில் நானும் இயக்குநர் வசந்தபாலனும் உரையாற்றுகிறோம்.
அதைத் தொடர்ந்து திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டனுடன் கலந்துரையாடல் நடைபெறும்
நாள் :புதன் கிழமை 17.06.15
நேரம் : மாலை 6 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்ப்ளெக்ஸ் முதல்தளம் ,முனுசாமி சாலை, மேற்கு கே.கே .நகர், சென்னை 78
***