மலையாளத்தில் உப பாண்டவம்
எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. டிசிபுக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். மொழியாக்கம் கே.எஸ்.வெங்கடாசலம்.
எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. டிசிபுக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். மொழியாக்கம் கே.எஸ்.வெங்கடாசலம்.
புதுமைப்பித்தனின் துரோகம் என்றொரு சிறுகதையை ஆதவன் எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் இருவர், எழுதி என்ன பயன், எதற்காக எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உரையாடுகிறார்கள். அதில் எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன் என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்குப் போஷாக்குத் தரமுடியாது என்கிறது ஒரு கதாபாத்திரம். யாருக்காக எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்ற கேள்வியை நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட எல்லாப் பதில்களும் தற்காலிக சமாதானமே. கதையின் மையப்பகுதி இது. ‘புகழும் பணமும் இருந்தும் …
கோவிட் லாக்டவுன் காலத்தில் பதிப்பகங்கள் மற்றும் புத்தகக் கடைகள் மிகவும் பாதிப்படைந்தன. மக்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய போதும் கடைகளுக்குச் சென்று புத்தகங்களை வாங்க முடியவில்லை. பல மாதங்களாக மூடப்பட்டதால் புத்தகக் கடைகள் பெரிய பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்தன. சில கடைகளால் இன்று வரை அதிலிருந்து மீள முடியவில்லை. தேசாந்திரி பதிப்பகமும் லாக்டவுன் காலத்தில் இது போன்ற பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் தானோ என்னவோ “Hello, Bookstore“ என்ற ஏ.பி. ஜாக்ஸ் இயக்கியுள்ள ஆவணப்படத்தைக் …
‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல் குறித்த வாசிப்பனுபவம். க.வை. பழனிசாமி தமிழ் இலக்கியத்தில் முக்கியமானப் புத்தகம் எஸ்.ராவின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’. வாசிக்கத் தொடங்குகிறபொழுதே அதை உணர்ந்துவிடுகிறோம். வாசகனிடம் அதிகமாக உரையாட விரும்புகின்ற நாவல். உரையாடல்தான் இந்த நாவலின் பலம். உரையாடல் பன்முகத் தன்மையில் இருக்கிறது. பழக்கமான நாவல்களிலிருந்து வேறானது என்பதை இதன் கதையாடல் சொல்லிவிடுகிறது. இந்தப் புரிதல் தோன்றியதுமே நாவல் மீதான அக்கறை கூடிவிடுகிறது. டால்ஸ்டாயை மையமாகக்கொண்டு ரஷ்ய சூழலில் எழுதப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே இதிலிருக்கும் புதுமையா? ரஷ்ய …
தாங் பேரரசைச் சேர்ந்த கவிஞர் ஹான்ஷான் குளிர்மலை(COLD MOUNTAIN) என்ற பெயரிலே அறியப்படுகிறார். உலகின் பரபரப்பிலிருந்து ஒதுங்கி குளிர்மலை எனும் மலையுச்சியினைத் தேடிச் சென்று தனிமையில் வாழ்ந்திருக்கிறார் ஹான்ஷான். அவர் வசித்த குகை இன்றைக்குமிருக்கிறது. ஹான்சானின் கவிதைகள் வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசுவதுடன் இயற்கை தரும் நிகரில்லாத மகிழ்ச்சியினையும் பாடுகின்றன. இக் கவிதைகள் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்றாலும், மாறாத ஞானத்தையும் உண்மையையும் கொண்டு வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன மொழிபெயர்ப்பாளர் ரெட் …
“தி லெஜண்ட் ஆஃப் மோலி ஜான்சன்” லியா பர்செல் இயக்கியபடம். 2021ல் வெளியாகியுள்ளது ஆஸ்திரேலிய சினிமாவிற்கெனத் தனித்த அழகியல் இருக்கிறது. பூர்வகுடி மக்களின் வாழ்க்கை, பண்ணைக் குடியிருப்புகள். பிரிட்டிஷ் காலனிய ஒடுக்குமுறைகள். துரத்தப்பட்ட பூர்வகுடிகளின் அவலம், உறுதியான பெண்களின் செயல்பாடு, பழங்குடியின கலாச்சாரத்தின் தனித்துவம் போன்றவற்றைப் பல்வேறு விதங்களில் ஆஸ்திரேலிய சினிமா தொடர்ந்து விவரித்து வருகிறது. The Drover’s Wife படத்தில் ஆல்பைன் பனிமலைத் தொடருக்கு மத்தியில் தனது நான்கு குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார் மோலி …
தமிழப்பெருந்தகை அய்யா நெல்லை கண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்ப உறவாக, என் மேல் பேரன்பு கொண்டவராய் விளங்கிய அய்யாவின் மறைவு பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது.
. நகுலன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அருவம் உருவம் நகுலன் 100 என்ற நூற்தொகுப்பு ஒன்றைக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கொண்டு வந்திருக்கிறார். நூல்வனம் இதனை வெளியிட்டுள்ளது. தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, அவரது ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம், நகுலனின் வாக்குமூலத்தைச் சித்திரக் கதையாக வெளியிட்டிருப்பது, நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் சிறந்த கட்டுரைகள் என அரிய தொகுப்பாக வெளியாகியுள்ளது. நகுலனின் நூற்றாண்டினை இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியாது. இந்நூல் நகுலனை …
நேற்றிரவு ஜூலியன் பார்ன்ஸ் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மனதில் சினிமா பாடலின் வரிகள் தோன்றியது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த பாடலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் படித்துக் கொண்டிருந்த The Sense of an Ending நாவலுக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு. ஏன் நினைவில் வந்தது என்று புரியவில்லை. இது போல நினைவின் அடுக்கிலிருந்து சில பாடல்கள் மேல் எழுந்து வருவதுண்டு உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது …
“I like to use simple words, but in a complicated way.” Carol Ann Duffy கரோல் ஆன டஃபி சமகாலப் பிரிட்டிஷ் கவிதைகளில் மிக முக்கியமானவர் பிரபலமான ஆண்களைப் பற்றி அவரது மனைவியின் குரலால் சொல்லப்படும் கவிதைகளை எழுதியிருக்கிறார். The World’s Wife என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. கரோல் ஆன் டஃபி ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். தனது பதினாறு வயதில் லிவர்பூல் கவிஞர்களில் ஒருவரான …