admin

புத்தக வெளியீடு

கவிஞர் க.வை.பழனிசாமி எழுதியுள்ள கவிதையின் அந்தரங்கம் என்ற விமர்சன நூலின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்கிறேன். நாளை மாலை கோவை புத்தகக் கண்காட்சி அரங்கினுள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது நவீன கவிதைகயை எப்படி புரிந்து கொள்வது, கவிதைக்குள்ளிருந்து ஒலிக்கும் கவிதைசொல்லி யார், கவிதையின் ஊடாக எதையெல்லாம் பெறுகிறோம், கவிதையின் ரகசியங்களாக எதைச் சொல்லலாம் எனப் பல்வேறு நிலைகளில் கவிதைகளை ஆராய்ந்திருக்கிறார் க.வை.பழனிசாமி தமிழின் 14 முக்கிய கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை முன்வைத்து மாறுபட்ட கவித்துவப் பார்வையை உருவாக்கியுள்ளார். …

புத்தக வெளியீடு Read More »

கோவை புத்தகக் கண்காட்சி குறித்து

இன்றைய தி இந்து நாளிதழில் கோவை புத்தகக் கண்காட்சி குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதில் நான் கலந்து கொண்டு உரையாற்றுவது குறித்துப் பேசியிருக்கிறேன்

பார்ஸிகளின் வரலாறு.

Qissa-e-Parsi என்ற பார்ஸி இனம் குறித்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். பார்ஸிகளின் பூர்வீகம். அவர்களின் வாழ்க்கை முறை, வழிபாடு,  உணவு மற்றும் நகைச்சுவை உணர்வு. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த போது மேற்கொண்ட வணிகம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான அவர்களின் மாற்றம். புகழ்பெற்ற பார்ஸி பிரபலங்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்களிப்பு செய்த பார்ஸி இனத்தவர்கள் என விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்கள் உணவு மற்றும் நகைச்சுவை உணர்வை பற்றிய பகுதி தனித்துவமானது. மும்பையின் வளர்ச்சிக்கு பார்ஸிகள் செய்துள்ள பங்களிப்பு. ஆங்கிலேயர்கள் மீது …

பார்ஸிகளின் வரலாறு. Read More »

ஜென் தேநீர்

செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய ஜென் தேநீர் வாசித்தேன். ஓஷோவின் ஜென் கவிதைகள் பற்றிய பார்வைகளை முன்வைத்து புகழ்பெற்ற ஜென் கவிஞர்களையும் கவிதைகளையும் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கூடவே முக்கியமான கவிதைகளை மொழியாக்கமும் செய்திருக்கிறார். ஜென்னைப் புரிந்து கொள்வது குறித்தும் ஜென் கவிதைகளின் இயங்கும் தளம் மற்றும் அதன் வழியே அடையும் விழிப்புணர்வு குறித்தும் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பு மற்றும் புரிதலின் வழியே மட்டுமே இது சாத்தியம். ஒரு கட்டுரையில் ஜென் அனுபவத்தை இப்படி விளக்கியிருக்கிறார் …

ஜென் தேநீர் Read More »

கேள்வியின் நிழல்

புதிய சிறுகதை. ஜுலை 2022 கேமிரா ஓடிக்கொண்டிருந்தது. ராம்பிரசாத் கேமிராவைப் பார்க்கவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டவரைப் போலிருந்தார். கேமிராவின் பின்புறமிருந்து திவ்யா சைகையால் அவரைப் பேசுமாறு சொன்னாள். அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை பேராசிரியர் ராம்பிரசாத்திற்குக் கணிதத்திற்கான உயரிய விருது ஒன்றை ஜப்பானிய அரசு அறிவித்திருந்தது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்பதால் அவரை நேர்காணல் செய்து  தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று நியூவிஷன் சேனல் முடிவு செய்திருந்தார்கள். விருது செய்தி …

கேள்வியின் நிழல் Read More »

ஜாக் லண்டன் நாவல்

ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை டாக்டர் சந்திரமௌலி தமிழாக்கம் செய்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது ஜுலை 24 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு கோவை புத்தகக் கண்காட்சியின் தேசாந்திரி அரங்கில் இந்த நூல் வெளியிடப்படுகிறது. புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் குப்ரினின் யாமா நாவலையும், ஹெஸ்ஸேயின் சித்தார்த்த நாவலையும் தேசாந்திரி பதிப்பகம் பதிப்பித்துள்ளது. எனது சினிமா கட்டுரைகளின் தொகுப்பான சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் மறுபதிப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அஜந்தா கண்ணாடி.

புதிய சிறுகதை. ஜுலை 2022 அவன் கண்ணாடியை உடைத்தபோது மணி நான்கு இருபது. பள்ளிவிட்டுத் திரும்பியதும் எதற்காக முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அலமாரியின் நடுத்தட்டில் சாய்த்து வைக்கப்பட்ட கண்ணாடி கைதவறி விழுந்து சில்லுசில்லாகச் சிதறியதைக் கண்டதும் பயத்துடன் குனிந்து எடுத்து ஒட்டவைக்க முயன்றான். உடைந்த சில்லுகளில் துண்டுதுண்டாக அவனது உருவம் காட்சியளித்தது விநோதமாக இருந்தது. அம்மா வருவதற்குள் கண்ணாடியை ஒட்ட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடி வாங்கி முடியாது. அம்மா …

அஜந்தா கண்ணாடி. Read More »

சிரிக்கும் வகுப்பறையின் மாணவன்

ஜி.கோபி உலக இலக்கியத்தில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர் பீல்டு, ஆலிசின் அற்புத உலகம், டோட்டோ சானின் ஜன்னலில் ஒரு சிறுமி, எக்சூபெரி எழுதிய குட்டி இளவரசன் போன்ற புத்தகங்கள் குழந்தைகளின் வாழ்வியலை பதிவு செய்ததில் முக்கியமானவை. அது போன்று தமிழில் எழுதப்பட்ட தேனி சீருடையானின் நிறங்களின் உலகம் புத்தகம் பள்ளி மாணவனின் வறுமையான வாழ்க்கை மற்றும் உளவியலை பேசக் கூடியது . அது போன்ற வரிசையில் வைத்து கொண்டாட வேண்டிய புத்தகம்தான் எழுத்தாளர். எஸ்.ரா …

சிரிக்கும் வகுப்பறையின் மாணவன் Read More »