சுதந்திர தின வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். இந்தத் திருநாளில் தேசவிடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகள், கலைஞர்கள் அனைவரையும் நினைவு கொள்வோம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். இந்தத் திருநாளில் தேசவிடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகள், கலைஞர்கள் அனைவரையும் நினைவு கொள்வோம்.
சீனாவின் புகழ்பெற்ற கவிஞர் துஃபு (Du Fu) பற்றிய ஆவணப்படம். BBC இதனைத் தயாரித்துள்ளது 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துஃபு சீனக் கவிஞர்களில் மிகச்சிறந்தவராகக் கொண்டாடப்படுகிறார். இவரது சில கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் முக்கியமானது. இது போலவே உதிர்ந்த இலைகளின் பாடல் கல்பனா மொழிபெயர்ப்பில் வெளியான கவிதை தொகுப்பும் மிகச்சிறப்பானது. Du …
பறவைகள் வானில் தடயமில்லாமல் பறந்து செல்வது போல மனிதர்களும் சில வேளைகளில் பயணிப்பதுண்டு. அப்படியான ஒரு பயணத்தின் கதையைத் தான் Hit The Road திரைப்படம் விவரிக்கிறது. ஈரானின் புகழ்பெற்ற இயக்குநர் ஜாபர் பனாஹி அரசிற்கு எதிராகச் செயல்பட்டார் என்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் பனாஹ் பனாஹி டெஹ்ரானில் உள்ள திரைப்படப் பள்ளியில் பயின்றவர், குறும்படங்களை உருவாக்கி விருது பெற்றிருக்கிறார். தந்தை இயக்கிய திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இது பனாஹ் பனாஹி இயக்கியுள்ள முதல்படம். …
தென்காசி புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 10 புதன்கிழமை மாலை உலகெங்கும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தினுள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது
கோவையில் இயங்கி வரும் சிறுவாணி வாசகர் மையம் வீடு தேடி வரும் புத்தகத் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இவர்களின் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இணைந்து கட்டணம் செலுத்தினால் வீடு தேடி நல்ல புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். கோவை புத்தகக் கண்காட்சியில் சிறிய கடையை அமைத்திருந்த சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷை சந்தித்தேன். இரண்டு புதிய நூல்களைப் பரிசாக அளித்தார். அவரது மகள் எனது உப பாண்டவம் நாவலை விரும்பிப் படித்திருக்கிறார் …
The Library Of Mabel Mogaburu என்றொரு சிறுகதையை ஃபொ்னான்டோ ஸோரன்டினோ எழுதியிருக்கிறார். அதில் அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பட்டியலிடுவதைப் பற்றிச் சொல்கிறார். அந்தப் புத்தகங்களை எப்படி வகைப்படுத்துவார். அதில் எவ்வாறு குறிப்புகள் எழுதுவார் என்பதையும் வேடிக்கையாக விவரிக்கிறார் ஒரு நாள் தற்செயலாகப் புத்தக் கடை ஒன்றில் பழைய புத்தகங்களைத் தேடும் மேபல் என்ற மாணவியைச் சந்திக்கிறார். அவள் ரிக்கார்டோ குய்ரால்டெஸ் எழுதிய டான் செகுண்டோ சோம்ப்ரா என்ற 1926 ஆம் ஆண்டு வெளியான நாவலைத் …
வால்ட் விட்மன் கவிதைகள் எந்தத் திரைப்படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய இந்த ஆவணப்படம் விட்மனின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு 2019 ல் வெளியிடப்பட்டுள்ளது
கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் கோயில் பூனைகள். காட்டு எருமைகள் என்ற இரண்டு முக்கியமான நூல்களை எழுதியுள்ளார் சிறந்த தமிழறிஞரான கோவைக்கிழார் எண்பது நூல்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார், இதில் முக்கியமானது கொங்குநாட்டின் வரலாற்றை எழுதியது. வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு,கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம்,கோயிற்கலை,சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.. மெட்ராஸ் பிரசிடென்சியின் அறநிலையத்துறை ஆணையாளராகப் பணியாற்றிய போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோயில்களுக்கு நேரில் சென்று அக்கோயில்களின் வரலாறு, நிர்வாக முறை, …
காந்தியைப் பற்றிய திரைப்படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ உருவாக்குவதற்கு முன்னதாக ஏ.கே.செட்டியார் காந்தி என்ற ஆவணப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். இதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள். சந்திப்புகள் வியப்பூட்டக்கூடியவை. இந்த அரிய ஆவணப்படம் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் மீட்கப்பட்ட சுருங்கிய வடிவம் தற்போது கிடைத்துள்ளது. காந்தி பவுண்டேஷன் இதனை வெளியிட்டுள்ளார்கள். அண்ணல் அடிச்சுவட்டில் என காந்தி ஆவணப்படத்திற்காக ஏ.கே. செட்டியார் மேற்கொண்ட பயணத்தை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார். 1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் பயணம் …