ஏ.கே. செட்டியாரின் காந்தி

காந்தியைப் பற்றிய திரைப்படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ உருவாக்குவதற்கு முன்னதாக ஏ.கே.செட்டியார் காந்தி என்ற ஆவணப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். இதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள். சந்திப்புகள் வியப்பூட்டக்கூடியவை. இந்த அரிய ஆவணப்படம் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் மீட்கப்பட்ட சுருங்கிய வடிவம் தற்போது கிடைத்துள்ளது. காந்தி பவுண்டேஷன் இதனை வெளியிட்டுள்ளார்கள்.

அண்ணல் அடிச்சுவட்டில் என காந்தி ஆவணப்படத்திற்காக ஏ.கே. செட்டியார் மேற்கொண்ட பயணத்தை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார்.

1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் பயணம் செய்த ஏ. கே. செட்டியார்  மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ‘டாகுமெண்டரி’ படம் எடுக்கவேண்டுமென்று ஆசை கொண்டார். இதற்காக இரண்டரை ஆண்டுகள். இரு முறை உலகைச் சுற்றி வந்தார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது ஆண்டுகளில், நூறு ஒளிப்பதிவாளர்கள் படம்பிடித்த 50,000 அடி நீளப் படங்களைக் சேகரம் செய்தார். 1940இல் ஆவணப்படம் வெளிவந்தது. பிறகு தெலுங்கு, இந்தி விளக்கவுரையுடன் அதை வெளியிட்டிருக்கிறார். இந்திய சுதந்திர தினத்தன்று இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது .1953இல் ஹாலிவுட்டில் அதன் ஆங்கில வடிவம் வெளியானது..

காந்தி ஆவணப்பட உருவாக்கத்தைப் பற்றி ஏ. கே. செட்டியார் நிறைய குறிப்புகள் எழுதியுள்ளார். அத்துடன் அரிய பல பிற்சேர்க்கைகளை இணைத்து இந்நூலை ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார்

0Shares
0