admin

ஐந்து வருட மௌனம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய 32 சிறுகதைகளின் தொகுப்பு. 404 பக்கங்கள் இதிலுள்ள பஷீரின் திருடன் குறுங்கதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்தவர் எழுத்தாளர் ஷாஜி. ஐந்து வருட மௌனம் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. வங்காளத்தில் வெளியாகவுள்ளது. தேவகியின் தேர்,இரண்டு ஜப்பானியர்கள், வெயிலில் அமர்தல் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன கடைசிக் குதிரைவண்டி சிறுகதை குறும்படமாக உருவாகி வருகிறது. அஸ்வின்குமார் என்ற இளம் இயக்குநர் இதனை உருவாக்குகிறார்.

காலத்தின் சிற்றலை

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ,கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஐரின் நெமிரோவ்ஸ்கி, பா ஜின், பில்லி காலின்ஸ், ஆலன் ஆல்பெர்க் ,ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி, வில்லியம் சரோயன் ,ஹெலன் ஹான்ஃப், அன்னா ஸ்விர், யோசனோ அகிகோ, யாசுனாரி கவாபத்தா உள்ளிட்ட பல்வேறு இலக்கிய ஆளுமைகள் மற்றும் அவர்களின் முக்கிய படைப்புகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

திரையெங்கும் முகங்கள்

உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களான Christ Stopped at Eboli , A Special Day, Two women Two Half Times in Hell Bitter Rice Twenty-four Eyes Stromboli போன்ற திரைப்படங்களை உள்ளடக்கிய 70க்கும் மேற்பட்ட அயல்மொழிப்படங்கள் குறித்த அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்

உலக சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பான சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் நூலை தேசாந்திரி பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் வெளியாகிறது

சித்தார்த்தா நாவல்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலின் புதிய பதிப்பு ஒன்றை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது இதற்காக அனுமதி அளித்த கவிஞர் திருலோக சீதாராம் குடும்பத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி

டான்டூனின் கேமிரா ஆங்கிலத்தில்

சிறார்களுக்காக நான் எழுதிய டான்டூனின் கேமிரா நூலை கவிஞர் சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்துஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.

எனக்குப் பிடித்த கதைகள்- 37

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியு ஷின்-யு (Black Walls – Liu Xin Wu) எழுதிய கருப்புச் சுவர்கள் சிறுகதை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கிறது. தனிநபரின் விருப்பமும் பொதுப்புத்தியும் கொள்ளும் மோதல் ஒரு குறியீடு போலவே இக்கதையில் சித்தரிக்கபடுகிறது. மிகச்சிறந்த கதை. இந்தக் கதையைச் சீனாவில் குறும்படமாகவும் எடுத்திருக்கிறார்கள் •• கருப்புச் சுவர்கள் லியு ஷின்-யு தமிழாக்கம்: தி.இரா.மீனா •••• கோடைகாலம். ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒரு சந்து. அங்கு ஒரு வீட்டோடு சேர்ந்த …

எனக்குப் பிடித்த கதைகள்- 37 Read More »

ஆங்கிலத்தில்

எனது மலைப்பாம்பின் கண்கள் சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்தக் கதை borderlessjournal என்ற இணைய இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு

தேசாந்திரி அரங்கு எண்

சென்னை நந்தனத்தில் நடைபெறுகிற 45வது புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 317 மற்றும் 318 ஐந்தாவது நுழைவாயில் வழியே வந்தால் அரங்கினைக் காணலாம். எல்லா நாட்களும் புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். சந்திக்க விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம். எனது நூல்கள் யாவும் தேசாந்திரியில் கிடைக்கின்றன.

புத்தகங்களின் மீதான ஆசை

The Groaning Shelf and other instances of book love என்ற புத்தகத்தைப் படித்தேன். பிரதீப் செபாஸ்ட்டியன் எழுதியது. புத்தகப்புழுவாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பிரதீப் தனது சேமிப்பிலுள்ள புத்தகங்களை எப்படிக் கையாளுகிறார். அரிய நூல்கள் வாங்கும் ஆசை உருவான விதம். மற்றும் தன்னைப் போன்ற புத்தக நேசர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைச் சுவைபட எழுதியிருக்கிறார். நீண்ட கால வாசிப்பு மற்றும் தீராத புத்தக் காதலே இந்தக் கட்டுரைகளின் அடிநாதம். தீவிரமாக புத்தகங்களைச் சேகரித்துப் …

புத்தகங்களின் மீதான ஆசை Read More »