காரந்தின் உலகம்
மகாகவி ரவீந்திரநாத் தாகூரைத் தனது ஆதர்சமாகக் கொண்டவர் கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த். இளமையில் சாந்தி நிகேதனுக்குச் சென்று கலைகள் மற்றும் புதிய கல்வி முறை பற்றி அறிந்து வந்திருக்கிறார். பின்னாளில் காரந்தின் செயல்பாடுகளைப் பாராட்டி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டமளித்துச் சிறப்பித்திருக்கிறது. காரந்தின் பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி அறியும் போது வியப்பளிக்கிறது. அவர் தொடாத விஷயமேயில்லை. கன்னட இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்திருக்கிறார். வைதீகமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் …









