admin

துணையெழுத்து – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை புனைவுக்கும் உண்மைக்குமான ‘இடைவெளி’, ‘தொலைவு’, ‘நெருக்கம்’ என்பன, நமக்கும் வாழ்வுக்குமான தொலைவினை ஒத்தவைதான். ‘நமக்கும் வாழ்வுக்குமான இடைவெளி’ என்பது, மிகவும் நெருங்கியிருக்கும் வெகுதொலைவுதானே! புனைவும் உண்மையும் ஒன்றையொன்று தழுவும்போதும் நாமும் வாழ்வும் ஒன்றாகிப் போகிறோம். நாமே பெரும்புனைவுதான்!. வாழ்வே பேருண்மைதான்!. ‘நமக்கும் வாழ்க்கைக்குமான உறவு’ என்பது, புனைவும் உண்மையும் கலந்த கட்டுரைக்கு நிகராது. தான்  பெற்ற ஆகச்சிறந்த அனுபவங்களையும் பிறரின் வாழ்க்கையின் வழியாகத் தான் கண்டுணர்ந்த ‘வாழ்வியல் சிடுக்கு’களையும் இணைத்துத் தனக்கேயுரிய …

துணையெழுத்து – வாசிப்பனுபவம் Read More »

கடற்கரைக் காற்று

மலையாள எழுத்தாளர் சி.வி. பாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்தமான சிறந்த திரைப்படங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அது சினிமாவின் இடங்கள் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் ஸ்ரீபதிபத்மநாபா. சுவாரஸ்யமான புத்தகம். அதில் வரும் ஒரு கட்டுரையின் சிறுபகுதியை மீள்பிரசுரம் செய்கிறேன் •• கடற்கரைக் காற்று சி.வி. பாலகிருஷ்ணன் தமிழில்:  ஸ்ரீபதிபத்மநாபா •• ஒரு பத்திரிகையாளர் நடிகை ஷீலாவிடம் செம்மீன் படத்தின் கருத்தம்மா கதாபாத்திரத்தைக் குறித்துக் கேட்டார். ஷீலா இவ்வாறு பதில் சொன்னார்: ”அது …

கடற்கரைக் காற்று Read More »

இரண்டு ஜப்பானியர்கள்

புதிய சிறுகதை அந்த இரண்டு ஜப்பானியர்களும் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருந்தார்கள். கியாத்தோவிலிருந்து இந்தியாவின் தென்கோடியிலிருந்த கொடைக்கானல் மலைக்கு வந்து சேர்ந்த தூரமது. உடல்வாகை வைத்து ஜப்பானியர்களின் வயதைக் கண்டறிய முடியாது. முகத்திலும் பெரிய மாற்றமிருக்காது. முழுவதுமாகத் தலைநரைத்த ஜப்பானியர் ஒருவரைக் கூட நந்தகுமார் கண்டதில்லை. கொடைக்கானலுக்கு வரும் வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரே வசதியானவர்கள். மற்றவர்கள் அந்த நாடுகளில் நடுத்தர வருமானமுள்ள தொழிலாளர்களாகவோ, அலுவலகப் பணியாளர்களாகவே இருப்பவர்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் வருவதுண்டு. இதுவரை …

இரண்டு ஜப்பானியர்கள் Read More »

நிறைவேறும் கனவுகள்

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படும். ஞானபீடம், சாகித்ய அகாதமி உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும் மதுரையில் எழுபதுகோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் உருவாக்கப்படும் என்று மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த நற்செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழையும் தமிழ் …

நிறைவேறும் கனவுகள் Read More »

மறையாத அதிகாரம்

.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது இலங்கையின் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் குறுநில மன்னர்களைப் போல மக்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள். சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.. அப்படிப்பட்ட ஒருவரின் கதையைத் தான் Elephant Walk திரைப்படம் விவரிக்கிறது. படம் ஜான் வைல் என்ற தேயிலைத் தோட்ட உரிமையாளர் இங்கிலாந்திற்கு வருவதில் துவங்குகிறது. அங்கே ரூத் என்ற வாடகை நூலகத்தினை நடத்தி வரும் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் வைல். ரூத்திற்கு இலங்கையைப் பற்றி எதுவும் …

மறையாத அதிகாரம் Read More »

கதையின் வெளிச்சம்.

திருச்சியை சேர்ந்த மீ. அ. மகிழ்நிலா எட்டாம் வகுப்பு பயிலுகிறார். எனது ஏழு தலை நகரம் சிறார் நாவலுக்கு மகிழ்நிலா எழுதியுள்ள விமர்சனம் ••• அக்கடா, கிறு கிறு வானம், ஏழு தலை நகரம் போன்ற நாவல்களையும் எழுதத் தெரிந்த புலி, தலை இல்லாத பையன்  போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். இவற்றுள் ஏழு தலை நகரம் என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் எனக்கு இந்தக்  கதை என் நண்பர்களின் …

கதையின் வெளிச்சம். Read More »

அன்னா ஸ்விர் கவிதைகள்

நான் என்னிலிருந்து வெளியே நீந்திப் போனேன் என்னைக் கூப்பிடாதே நீயும் உன்னிலிருந்து வெளியே நீந்திப் போ நாம் நீந்திப் போய்விடுவோம், நமது உடல்களை விட்டு கரையில் ஒரு ஜோடி கடற்கரைச் செருப்புகள் போல அன்னா ஸ்விர் (Anna Swir) போலந்தின் முக்கியக் கவிஞர். இவரது தந்தை ஒரு ஓவியர். ஆகவே குழந்தைப் பருவம் முழுவதும் ஒவியக்கூடத்திலே கழிந்தது. கல்லூரி படிப்பை முடித்த அன்னா சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றியிருக்கிறார். …

அன்னா ஸ்விர் கவிதைகள் Read More »

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள்

ஒரு சிறுகதையை ஆழ்ந்து படித்து எவ்வளவு சிறப்பாக ஆராய முடியும் என்பதற்கு உதாரணமாக உள்ளது ஜிஃப்ரி ஹாஸன் எழுதியுள்ள இந்த விமர்சனக்கட்டுரை இலங்கையில் வாழும் ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதைகளும் மொழிபெயர்ப்புகளும செய்து வருகிறார். பதாகை இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. பதாகைக்கும் ஜிஃப்ரி ஹாஸனுக்கும் எனது அன்பும் நன்றியும் •••• ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் – எஸ்.ரா.வின் காகிதப்பறவைகள் கதை கிளர்த்தும் சலனங்கள் -ஜிஃப்ரி ஹாஸன் –இலங்கை தமிழ்ச்சிறுகதையில் இருவேறுபட்ட பரிமாணங்களை மொழிசார்ந்து பரீட்சித்துப் பார்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். …

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் Read More »

உப பாண்டவம்- மலையாளம்

எனது நாவல் உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. டிசி புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டு மலையாளத்தில் எனது மூன்று நூல்கள் வெளியாக இருக்கின்றன.

மெளனியுடன் கொஞ்ச தூரம்

திலீப்குமார் எழுத்தாளர் திலீப்குமார் மெளனியின் படைப்புலகம் குறித்து ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன நூலை எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மிக முக்கியமான நூல் அந்த நூலின் துவக்கத்தில் திலீப்குமார் தனது இலக்கியப்புரிதலை அழகாக வரையறை செய்து கொண்டிருக்கிறார். •••• மௌனியைப் பற்றிப் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாகத் தூஷிக்கவும் பலர் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், …

மெளனியுடன் கொஞ்ச தூரம் Read More »