admin

கவிஞனின் நாட்கள்

அனிதா தேசாயின் புகழ்பெற்ற நாவல் In Custody. இதனை மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய வேஷத்தில் சசிகபூர், ஓம்பூரி, ஷப்னா ஆஸ்மி நடித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற உருது கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியை சந்தித்து ஒரு நேர்காணலை மேற்கொள்ளத் தேவன் சர்மா முயல்வதே மையக்கரு. மிர்பூரில் உள்ள ராம் லால் கல்லூரியில் இந்தி இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியரான தேவனுக்கு உருதுக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு. வீட்டிலிருந்து தேவன் கல்லூரிக்குக் கிளம்புவதில் படம் ஆரம்பமாகிறது. அவர் மனைவி பள்ளிக்குச் …

கவிஞனின் நாட்கள் Read More »

சிறிய மனிதனும் பெரிய உலகமும்.

வில்லியம் சரோயன் (William Saroyan) எழுதிய தி ஹ்யூமன் காமெடி 1943ல் வெளியான சிறந்த நாவல். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கலிபோர்னியாவின் இதாக்காவில் கதை நிகழுகிறது. பதினான்கு வயதான ஹோமரைப் பற்றியதே நாவல். அவன் பகுதி நேரமாகத் தந்தி அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மா, சகோதரி பெஸ் மற்றும் தம்பி யுலிஸஸ் என அவனது உலகம் மிகச்சிறியது. தந்தி அலுவலகத்தில் இரவு நேரம் தந்தி வந்தால் அதைக் கொண்டு கொடுப்பதற்கு ஆள் தேவை என்பதால் …

சிறிய மனிதனும் பெரிய உலகமும். Read More »

நிழல் வேட்டை

23 Paces to Baker Street 1956 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படம். ஹென்றி ஹாத்வே இயக்கியது. பிலிப் ஹன்னன்  என்ற பார்வையற்ற நாடக ஆசிரியர் ஒருவர் குற்ற நிகழ்வு ஒன்றினைக் கண்டறிவதே இந்த திரைப்படம். Don’t Breathe, ஒப்பம் , ராஜ் தி கிரேட் போன்ற படங்களுக்கு இதுவே முன்னோடி. தன்னைச் சுற்றி நடக்கும் உரையாடல்களைத் துல்லியமாக நினைவில் பதிவு செய்து கொள்ளும் திறன் கொண்டவர் பிலிப். நாடக ஆசிரியராக இருப்பதால் கற்பனை …

நிழல் வேட்டை Read More »

உலக இலக்கியத்தின் சாளரம்.

வாசிப்பை நேசிப்போம் குழுவில் கா.மூர்த்தி எழுதியுள்ள புத்தக விமர்சனம். •••• நூல் : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம் ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி ஒரு வருடத்தில் எந்தெந்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயாரிப்பதற்கு ஒரு “Shortcut” 1.  எஸ்ரா அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் 2. எஸ்ரா பரிந்துரைக்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் இதை முடித்தால் அந்த ஒரு வருடத்திற்கு பலதரப்பட்ட புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைக்கும். இந்த …

உலக இலக்கியத்தின் சாளரம். Read More »

நீர்மை

என்.எஸ்.மனோகரன் மிகச்சிறந்த ஓவியர். சென்னை ஒவியக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர். கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி நிறைய இளம் ஓவியர்களை உருவாக்கியவர். மனோகரின் நீர்வண்ண ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிராமிய வாழ்வின் காட்சிகளைத் தனது தூரிகையின் வழியே நுட்பமான கலைப்படைப்பாக உருவாக்குகிறார். சீன நிலக்காட்சி ஓவியங்களில் காணமுடிகிற நுட்பமும் எளிமையும் இவரது ஓவியங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக ஒளியும் நிழலும், வசீகரமாக வண்ணங்களைப் பயன்படுத்தும் விதமும் புதிய ஓவிய மொழியாக வெளிப்படுகின்றன. ஓவியர் என்.எஸ். மனோகரன் வாழ்க்கை மற்றும் ஓவியங்கள் …

நீர்மை Read More »

நதிமுகம் தேடி

ராம் தங்கம் நம்பிகை தரும் இளம்படைப்பாளி. இவரது திருக்கார்த்தியல் நல்ல சிறுகதைத் தொகுப்பு. இவரது ராஜவனம் என்ற நாவலை வாசித்தேன். எண்பது பக்கங்கள் கொண்ட சிறிய நாவல். முகளியடி மலையிலுள்ள நந்தியாற்றின் மூலம் காணச் செல்லும் பயணத்தின் கதை. காடு நூறாயிரம் உயிர்களின் வாழ்விடம். காட்டின் பிரம்மாண்டம் அதன் மரங்கள். காட்டில் எப்போது இருள் மிச்சமிருக்கிறது. பாதைகளை அழிப்பது தான் காட்டின் இயல்பு. மழைக்காலத்தில் காடு கொள்ளும் ரூபம் விசித்திரமானது. கோபாலும் அவன் நண்பர்களும் முகளியடி மலையை …

நதிமுகம் தேடி Read More »

ஃபிலிப் லார்கின்

சொல்வனம் டிசம்பர் இதழில் கவிஞர் ஃபிலிப் லார்கின் பற்றி மிகச்சிறப்பான கட்டுரை ஒன்றை நம்பி எழுதியிருக்கிறார் ஃபிலிப் லார்கின்: கவிதைகளை வாசித்திருக்கிறேன். Kingsley Amis உடனான அவரது நட்பு மற்றும் அவருக்கு எழுதிய கடிதங்களைப் படித்திருக்கிறேன். A Girl in Winter என்ற அவரது நாவல் நூலகத்தில் பணியாற்றும் கேதரின் வாழ்க்கையில் பனிரெண்டு மணிநேரங்களை விவரிக்கக்கூடியது. லார்கினின் நேர்காணல் ஒன்றில் உங்களைப் போலவே நூலகராக வேலை செய்தவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் என்று கேள்விகேட்பவர் சொல்லும் போது …

ஃபிலிப் லார்கின் Read More »

இளம்வாசகி

எனது நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து என்ற சிறார் நூலுக்கு பதினோறு வயது சிறுமி ரியா எழுதியுள்ள விமர்சனம். உன் அன்பான வாசிப்பிற்கு நன்றி ரியா. •• பெயர் : ரியா ரோஷன் வகுப்பு : ஆறாம் வகுப்பு வயது :11 இடம் :சென்னை புத்தகம் :நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து ஆசிரியர்:எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் :தேசாந்திரி விலை : Rs.70 சனிக்கிழமை நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். நான் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம்  …

இளம்வாசகி Read More »

முயலின் தோழன்

Roald & Beatrix: The Tail of the Curious Mouse தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும், எழுத்தாளர் ரோல்ட் டாலின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை முதன்மையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எழுத்தாளரான ரோல்ட் டால், சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி, மாடில்டா, தி ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ்’ போன்ற புகழ்பெற்ற சிறார் படைப்புகளை எழுதியவர் ரோல்ட் டால் சவுத் வேல்ஸில் உள்ள லாண்டாஃப் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் நார்வேயைச் சார்ந்தவர். தொழில்நிமித்தம் …

முயலின் தோழன் Read More »