தேசாந்திரி புதிய வெளியீடுகள்-1
சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் புதிய நூல்களை வெளியிடுகிறது. அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பு மற்றும் புதிய நூல்கள் வெளியாகின்றன சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கதைக்கம்பளம் என்ற பெயரில் ஏழு சிறு நூல்களாக முன்பு வெளியாகியிருந்தது. அதைத் தொகுத்து நான்கு நூல்கள் ஒன்று சேர்ந்த ஒரே புத்தகமாக வெளியிடுகிறோம் கடலோடு சண்டையிடும் மீன் என்ற தலைப்பில் வெளியாகிறது. அண்டசராசரம் நேதாஜியால் உருவாக்கபட்ட ஆசாத் வங்கியில் சேமித்து வைக்கபட்ட பணம், அவரது …









