admin

வெயிலில் அமர்தல்

புதிய சிறுகதை நியூசிலாந்திலிருந்து கிளம்பும் போது வர்ஷினிக்கு அப்படி ஒரு யோசனை இருக்கவேயில்லை. அவள் பெங்களூரில் உள்ள தனது அபார்ட்மெண்டிற்குத் தான் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். விமான டிக்கெட் கூடப் பெங்களூருக்கே போட்டிருந்தாள். ஆனால் பயணம் கிளம்பும் முதல் நாள் டிக்கெட்டை சென்னைக்கு மாற்றினாள். அப்பா அம்மாவோடு சில நாட்கள் இருக்கலாம் என நினைத்து சென்னைக்குப் பயணம் செய்தாள். ஆனால் சென்னைக்கு வந்த இரண்டாம் நாள் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவிடம் பெங்களூர் போவதாகச் …

வெயிலில் அமர்தல் Read More »

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியான ஆ.மாதவன் காலமானார். அவரது மறைவிற்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி . திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த ஆ. மாதவன் அவர்களை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிகப் பண்பான மனிதர். அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. அவரைப் பற்றி கதாவிலாசத்தில் நான் எழுதிய கட்டுரையை வாசித்து விட்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். நன்றி தெரிவித்தார். நகுலனைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவரையும் காண்பது வழக்கம்.. வாசகர் வட்டம் வெளியிட்ட அவரது புனலும் மணலும் முக்கியமான நாவல். …

அஞ்சலி Read More »

ஆறாம் நாள் உரை – ஜாக் லண்டன்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் பேருரைகளின் ஆறாம் நாளில் ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல் (The Call of the Wild) குறித்து உரையாற்றுகிறேன்.

வங்கச் சிறப்பிதழ்

சொல்வனம் தன் 12 ஆண்டுக் காலச் செயல்பாட்டில் பல்வேறு சிறப்பான மொழியாக்கங்களைத் தந்திருக்கிறது. முக்கியப் படைப்பாளிகளுக்குச் சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளது. தற்போது வங்காள இலக்கியத்திற்குச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது வங்க இலக்கியத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. நீலகண்ட பறவையைத் தேடியும். பொம்மலாட்டமும், பதேர்பாஞ்சாலியும், காட்டின் உரிமையும், ஆரோக்கிய நிகேதனமும், கறையானும் மறக்கமுடியாத படைப்புகள். வங்க இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த திரு.சு.கிருஷ்ணமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்திய இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய வங்க இலக்கியத்தையும், அதன் முக்கியப் படைப்பாளிகளையும் …

வங்கச் சிறப்பிதழ் Read More »

ஐந்தாம் நாள் உரை – ஸ்டெபான் ஸ்வேக்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகளின் ஐந்தாம் நாள் உரை ஸ்டெபான் ஸ்வேக் பற்றியது ஸ்ருதி டிவியில் இந்த நிகழ்வு நேற்று மாலை ஒளிபரப்பானது

ஓவியங்களை எரித்தவர்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜி ராணுவம் திட்டமிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது. குறிப்பாகப் பாரீஸ் ம்யூசியங்களிலிருந்த அரிய ஓவியங்களைத் கொள்ளையடித்தார்கள். இக் கொள்ளைக்குப் பயந்து கலைப்பொருள் சேகரிப்பவர்கள் வங்கியின் பாதுகாப்பு அறையில் தங்கள் அரிய கலைப்பொருட்களை ஒளித்து வைத்தார்கள். அப்படியும் அவர்களால் ஓவியங்களைக் காப்பாற்ற முடியவில்லை. வங்கியின் பாதுகாப்பு அறைகளை உடைத்து ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஐம்பதாயிரத்திற்கும் மேலான அரிய ஓவியங்கள் சிற்பங்கள். கொள்ளை போயின. இதில் மீட்கப்பட்டது வெறும் அறுபது சதவீதம் மட்டுமே என்கிறார்கள். …

ஓவியங்களை எரித்தவர்கள். Read More »

நான்காம் நாள் பேருரை

ஏழு உலக இலக்கியப் பேருரைகளில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஐசக் பாஷவிஸ் சிங்கர் எழுதிய – “கிம்பல் மற்றும் கதைகள்” குறித்த உரை இன்று மாலை 6 30 மணிக்கு ஒளிபரப்பாகும்