நூலக மனிதர்கள் 14 சார்லியுடன் ஒரு பயணம்.
9/11க்கு முன்பு வரை சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செயல்பட்டு வரும் அமெரிக்கன் சென்டர் நூலகத்திற்குப் போய் வருவதற்கு எந்தக் கெடுபிடியும் கிடையாது. வாசலில் ஒரு காவலர் பரிசோதனை செய்வார். அவ்வளவே. உறுப்பினர் ஆவதும் எளிதானதே. வேலையில்லாமல் சுற்றித்திரிந்த என்னைப் போன்றவர்களுக்குப் பல ஆண்டுகள் அடைக்கலம் தந்த இடம் அமெரிக்கன் சென்டர் நூலகம். அன்றாடம் அந்த நூலகத்திற்குப் போய்வருவேன். அமெரிக்கா சார்ந்த அனைத்துத் துறை நூல்களைக் கொண்ட அழகான நூலகம். நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு மிகச்சிறப்பான வசதி …