admin

சபார்டி ஜோகோ தமோனோ

விருட்சன் என்ற புனைபெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் தமிழில் அதிகம் கவனிக்கப்படாத தென்கிழக்கு ஆசியக் கவிதைகளை ஆர்வத்துடன் மொழியாக்கம் செய்து வருகிறார். இவர் மொழியாக்கம் செய்து சிறுவெளியீடாக வெளியிட்டுள்ள சபார்டி ஜோகோ தமோனோ (Sapardi Djoko Damono ) இந்தோனோஷியாவின் முக்கியக் கவிஞர். அவரது கவிதைகளின் இரண்டு ஆங்கிலத் தொகுப்புகள் என்னிடமுள்ளன. அவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன். விருட்சன் சபார்டியின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல தேர்வு. மொழியாக்கத்தில் சில சொற்களைத் திருத்தம் செய்து மேம்படுத்தினால் …

சபார்டி ஜோகோ தமோனோ Read More »

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த வாசகர். தன் பேச்சின் நடுவே தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள் குறித்து அழகாக எடுத்துப் பேசக்கூடியவர். அவரது மேடைப்பேச்சை ரசித்துக் கேட்டிருக்கிறேன். சிரித்த முகத்துடன் ,கடுஞ்சொல்லால் எவரையும் தாக்கிப் பேசாமல்,மிக நாகரீகமான முறையில், அழகாகத் தனது கருத்துகளை முன்வைக்கக்கூடியவர். லாக்டவுன் காலத்தில் அவர் தனக்கு விருப்பமான சிறுகதைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். தி.ஜானகிராமன், வண்ணதாசன். அ.முத்துலிங்கம் சூடாமணி எனச் சிறந்த படைப்பாளிகளின் கதைகளைப் பாரதி பாஸ்கர் சிறப்பாக …

பாரதி பாஸ்கர் Read More »

கார்க்கியின் இளமைப்பருவம்.

எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதியாகச் சோவியத் ரஷ்யாவில் படமாக்கியிருக்கிறார்கள். The Childhood of Maxim Gorky, Gorky 2: My Apprenticeship, Gorky 3: My Universities என 1938ல் வெளியான இந்தப் படங்களைப் பார்த்தேன். இயக்குநர் மார்க் டான்ஸ்காய் இயக்கியது. ஹாலிவுட் படங்களும் ரஷ்ய படங்களுக்கும் தயாரிப்பிலும் கலைவெளிப்பாட்டிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை இந்தப் படங்களைக் காணும் போது அறிந்து கொள்ள முடிகிறது. ரஷ்யாவில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை மிகுந்த கவித்துவமாக …

கார்க்கியின் இளமைப்பருவம். Read More »

காந்தியின் நிழலில் 6 இன்றைய தேவை.

காந்தி இன்றிருந்தால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவாரா என்றொரு கேள்வியை தினேஷ் என்ற கல்லூரி மாணவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நிச்சயம் பயன்படுத்துவார். காந்தியின் காலத்திலிருந்த தந்தி, கடிதம், தொலைபேசி எல்லாவற்றையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார் தானே. ஆனால் எப்படிப் பயன்படுத்தினார் என்பதில் தான் அவரது தனித்துவமிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினர் சமூக ஊடகங்களின் வழியே  மனதிலுள்ள வெறுப்பை, கசப்பை, எதிர்மறையான எண்ணங்களைப் பொதுவெளியில் கக்குவது போல அவர் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார். சமூக ஊடகங்களின் …

காந்தியின் நிழலில் 6 இன்றைய தேவை. Read More »

அகரமுதல்வன் உரை

நண்பர் தமிழ்நேசன் நடத்தும் மும்பை இலக்கியக் கூடம்  நிகழ்வில் எழுத்தாளர் அகரமுதல்வன் எனது படைப்புகள் குறித்து உரையாற்றுகிறார் நாள்: 03.10.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி ஜூம் செயலி மற்றும் பேஸ்புக் நேரலை  வழியாக நிகழ்வு நடைபெறும். Meeting Id  : 215 501 3891 Password  : 231764. தொடர்புக்கு : இரா. தமிழ் நேசன்

காதலின் நிழல்.

காஸபிளங்கா படத்தை இருபது முறைகளுக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். மைக்கேல் கர்டிஸ் இயக்கி 1942 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில், ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பெர்க்மேன் மற்றும் பால் ஹென்ரிட் ஆகியோர் நடித்துள்ளனர்.நேற்றிரவு திரும்பும் காஸபிளாங்கா பார்த்தேன். பழைய போட்டோ ஆல்பங்களைத் திரும்பப் பார்க்கும் போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் தரும் அனுபவமது. பிரிந்த தனது காதலியை மறுபடியும் சந்திக்கும் ஒருவனின் கதை சினிமாவில் என்றும் அழியாதது. அதுவும் காதலி உதவி கேட்டு நிற்கும் சூழலும் அவளுக்காகக் காதலன் …

காதலின் நிழல். Read More »

சுதிர் மிஸ்ரா

இந்தி திரைப்பட இயக்குநர் சுதிர் மிஸ்ரா பற்றிய ஆவணப்படத்தில் அவர் தான் படித்த சாகர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே உள்ள மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் உரையாடுகிறார். அப்போது இந்திய இலக்கியத்தில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்கிறார். ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மாணவன் மட்டும் பிரேம்சந்த் என்கிறான்.. சமகால எழுத்தாளர்கள் ஒருவரையும் படிக்கவில்லையா என்று மறுபடியும் கேட்கிறார். ஒரு மாணவன் மட்டும் சேதன் பகத் என்கிறான். இப்படித்தானிருக்கிறது நமது கல்விமுறை. யாரும் எந்த முக்கிய …

சுதிர் மிஸ்ரா Read More »

காகிதப்பறவைகள் குறித்து

இலக்கிய அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும் சிறந்த படைப்புகள் குறித்து கலந்துரையாடும் நண்பர்கள் குழுவாக அசைவு உருவாக்கபட்டிருக்கிறது அசைவு இலக்கிய விவாதக் குழு நண்பர்கள் இம்முறை விவாதத்திற்கு எனது சிறுகதை காகிதப்பறவைகளைத் தேர்வு செய்து உரையாடியிருக்கிறார்கள். காகிதப்பறவைகள்  குறித்து விவாதித்த கருத்துக்கள் தொகுத்து கீழே பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. அசைவு இலக்கிய விவாதக்குழு நண்பர்கள் ம.கண்ணம்மாள், க.விக்னேஷ்வரன், சரவணன் மாணிக்க வாசகம், சுஷில் குமார், சக்திவேல், சுஜா, நவீன், காயத்ரி, பால ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் …

காகிதப்பறவைகள் குறித்து Read More »

இசையால் வென்றவர்.

நெருக்கமானவர்களின் மரணம். வழிகாட்டியாக இருந்தவர்களின் மரணம் எனத் தொடர்ந்து மரணச்செய்திகளைக் கேட்டுக் கேட்டு மனம் துக்கத்திலே துவண்டு போயிருக்கிறது. நேற்று முழுவதும் நண்பர்கள் பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கான துக்கத்தையும் அவரது இனிமையான பாடல்களைக் கேட்ட நாட்களையும்  பகிர்ந்து கொண்டேயிருந்தார்கள். நான் அதிகம் சினிமா பாடல்களைக் கேட்பவனில்லை. ஆனாலும் என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூடி நிறையப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். பாடல்களுக்காகவே ஒரு படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த நாட்களில் கேசட்டில் சினிமா பாடல் பதிவு …

இசையால் வென்றவர். Read More »