ஜானகிராமனின் ஜப்பான்.
எழுத்தாளர் தி.ஜானகிராமன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது ஜப்பானிய பயணநூலான உதயசூரியன் குறித்த உரை ஒன்றை வெளியிட்டுள்ளேன் தேசாந்திரி Youtube page ல் இதனைக் காணலாம் இணைப்பு: https://youtu.be/9UFRomzf3LY
எழுத்தாளர் தி.ஜானகிராமன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது ஜப்பானிய பயணநூலான உதயசூரியன் குறித்த உரை ஒன்றை வெளியிட்டுள்ளேன் தேசாந்திரி Youtube page ல் இதனைக் காணலாம் இணைப்பு: https://youtu.be/9UFRomzf3LY
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆந்திர ஜோதி ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. இதனை சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியை சேர்ந்த ஜி. பாலாஜி. இந்தக் கதையை வாசித்துவிட்டு ஆந்திராவிலிருந்து நிறைய பாராட்டு செய்திகள் மின்னஞ்சலில் வந்தவண்ணம் இருக்கின்றன. கடப்பா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஒரு டாக்டர் தன் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை படித்ததில்லை என்று சிறந்த பாராட்டுரை ஒன்றை அனுப்பியிருக்கிறார். இன்னொரு மொழியில் எனது கதை இத்தனை தீவிரமாக வாசிக்கபட்டு …
மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீர் குறித்த ஆவணப்படம். பஷீரின் கதைகள் மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது. பஷீரின் வீடு. அவரது மனைவியின் நேர்காணல், பஷீர் குறித்த நாடகம் என நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது இந்த ஆவணப்படம் My Name Is Basheer https://youtu.be/9-Tm24XRRCE ••• குஞ்ஞுண்ணி மலையாளத்தின் முக்கியக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னஞ்சிறிய கவிதைகளின் மூலம் அற்புதமான கவித்துவ அனுபவங்களை வெளிப்படுத்தியவர். அவரது …
ஒரு வடக்கன் வீரகதா படம் பார்த்தேன். முன்னதாக நான்கு முறை பார்த்திருந்த போதும் படம் சுவாரஸ்யமாகவே இருந்தது. சில படங்கள் காலத்தை வென்று ஒளிரக்கூடியவை. அதில் ஒன்று ஒரு வடக்கன் வீர கதா. கதை 16 ஆம் நூற்றாண்டின் வடக்குக் கேரளாவில் நடக்கிறது. சதியன் சந்து என்று அறியப்படும் சந்துவின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி அவன் தரப்பு நியாயங்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் மிக அழகாகச் சித்தரித்திருக்கிறார். வரலாற்றில் ஒருவன் துரோகியாகச் சித்தரிக்கப்படுவதற்கு இப்படியும் காரணமிருக்கலாம் என்பது …
சிறுகதை. கைகளால் அல்ல வாளால் கதவை தட்டிக் கொண்டிருந்தான் மாயநாதன். துருப்பிடித்த வாளது. குடையைக் கையில் எடுத்துச் செல்வது போல எங்கு சென்றாலும் அவன் பெருவாள் ஒன்றை கையோடு தூக்கிக் கொண்டு அலைந்தான். மிக நீண்ட வாளது. “நான் உன்னைக் கொல்லணும். ராமண்ணா கதவைத் திற“ என்ற அவனது குரல் உரத்துக் கேட்டது “நான் தூங்கிட்டேன். நாளைக்கு வா“ எனச் சப்தமிட்டேன் “இல்லை. நான் உன்னை இப்போ பாக்கணும்.. நீ கதவைத் திறக்காட்டி.. பக்கத்து வீட்டுக் கதவை …
எனது சிறுகதை சிற்றிதழ் 2019ம் ஆண்டிற்கான இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றுள்ளது. இந்தக் கதை ஆனந்தவிகடனில் வெளியானது. ஆண்டு தோறும் ஏப்ரலில் நடைபெறும் பரிசளிப்பு விழா இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. இந்தச் சிறுகதையை உள்ளடக்கிய 12 கதைகள் சேர்ந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். ••
உதய்பூர் போயிருந்த போது ராஜஸ்தானின் பாரம்பரிய பொம்மலாட்டத்தைப் பார்த்தேன். உதய்பூரில் நாட்டுப்புறக்கலைகளுக்கான கலைக்கூடம் ஒன்றை அரசே உருவாக்கியுள்ளது. ராஜஸ்தான் முழுவதுமே இது போன்ற நாட்டுப்புறக்கலை மையங்கள் செயல்படுகின்றன. இங்கே தினமும் மாலை நேரம் ஆடல் பாடல் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு இதனால் நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர் வி.. ரமணி பாவைக்கூத்துக் கலைஞர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் இயக்கிய போது அவருடன் பொம்மலாட்டக்கலைஞர்களைச் சந்திக்க உடன் சென்றிருந்தேன். தமிழகத்தில் அவர்களின் …
ஹிந்துஸ்தானி இசையின் துருபத் குறித்த இயக்குநர் மணிகௌலின் மிக முக்கியமான படைப்பு. இதைக் காணும் போது மெய்மறந்து போய்விடுகிறது பரவசமூட்டும் அனுபவம் தரும் மிகச்சிறந்த ஆவணப்படம்.. பிலிம் டிவிசன் தயாரிப்பில் உருவானது. இணைப்பு: https://youtu.be/Lye2FSx0F4c
இயக்குநர் மணிகௌல் ஒரு நேர்காணலில் தனது படங்களுக்குச் சிறிய கதை போதுமானது. பெரிய கதையும் நிறையக் கதாபாத்திரங்களும் சிலருக்கே தேவைப்படுகின்றன என்கிறார். Uski Roti (1970) Duvidha போன்ற அவரது படங்களே இதற்கு உதாரணம். இதையே தான் ஹெமிங்வே சிறுகதை பற்றிய குறிப்பு ஒன்றில் வெளிப்படுத்துகிறார். குறைவான கதாபாத்திரங்கள். ஒரு சம்பவம் ஒரு நல்ல சிறுகதைக்குப் போதும். கதையின் ஆழம் தான் முக்கியமானது என்கிறார். இதற்குச் சிறந்த உதாரணம் அவரது Killers என்ற சிறுகதை. சிகாகோவைச் சேர்ந்த …
நாம் இன்று வரை சிறுவர்களுக்குச் சொல்லி வரும் பாட்டியிடமிருந்து வடையைத் திருடும் காகம் கதை நம்முடையதல்ல. ஒன்றாம் நூற்றாண்டில் ஈசாப் சொன்ன கதையது. இந்தக் கதையின் வரலாற்றைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். நேற்று இணையத்தில் இந்தக் கதையினை விவரிக்கும் ஓவியங்கள் சிலவற்றைப் பார்த்தேன். இக்கதை ஈசாப் சொல்வதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் புழங்கியது என்கிறார்கள். அப்போது கதையில் காகம் வடை எதையும் திருடவில்லை. அதன் வாயில் இருப்பது வெண்ணெய் துண்டு. அதையே நரி ஏமாற்றி வாங்க முயல்கிறது. …