admin

சுந்தர ராமசாமி ஆவணப்படம்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறித்த அரிய ஆவணப்படம் ஒன்றை ஆர்.வி.ரமணி இயக்கியுள்ளார். நீ யார் என்ற இந்த ஆவணப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் அரிய நேர்காணல், உரை, மற்றும் அவர் படைப்புகள் குறித்த பார்வைகள், அவரது இறுதி நாட்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. சிறப்பான ஆவணப்படம். Nee Yaar? (Who are You?) Directed by RV Ramani | 2008 இணைப்பு https://youtu.be/a1wxroOZYxQ

காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன்

800 முதல் 600 B C வரையிலான பண்டைய சீன பாடல்களின் தொகுப்பு The Book of Songs. இந்த நூலை வாசிக்கையில் சீனாவில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பாடல்களும் இசையும் கலந்திருப்பதை அறிய முடிகிறது. தமிழின் சங்க கவிதைகளைப் போலவே இயற்கையைப் புகழ்ந்துபாடும் இந்தக் கவிதைகள் சீனப்பண்பாட்டின் பொக்கிஷமாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளைப் போலவே சீனக் கவிதைகளுக்கும் ஒரு நீண்ட மரபிருக்கிறது. டாங் மன்னரின் வம்சம் ஆட்சி செய்த காலமே …

காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன் Read More »

காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்

தபால்காரரை எதிர்பார்த்து எழுத்தாளர்கள் காத்திருப்பது குறித்து எழுத்தாளர் ஜான் பிரைன்  எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். பாப்லோ நெரூதாவிற்கு வரும் தபால்களைக் கொண்டு வருவதற்கென்றே தனியே ஒரு தபால்காரர் இருந்தார். தினமும் நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருவது வழக்கம். அதில் பாதிக் காதல் கடிதங்கள். விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார். அவரது கையிலுள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்தப் போகின்றன என்று அவருக்குத் தெரியும். உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர். அதே …

காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன் Read More »

கங்கா தின்

ருடியார்ட் கிப்ளிங்கின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டபடம் கங்கா தின் (Gunga Din). ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் இயக்கிய இந்தப்படத்தில் கேரி கிராண்ட், விக்டர் மெக்லாக்லன் மற்றும் டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் ஜூனியர் ஆகியோர் நடித்துள்ளனர். 1939 ஆம் ஆண்டு வெளியானது. Sam Jaffe கங்கா தினாக நடித்திருக்கிறார். 1830 களில் இந்தியாவில் தக்கீ(Thuggee) எனப்படும் வழிப்பறிக் கொள்ளையர்கள் செயல்பட்டனர். வணிகர்களுடன் இணைந்து பயணித்து அவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் இந்தத் தக்கீகள். காளியின் புதல்வர்களாகத் …

கங்கா தின் Read More »

கிம்மின் சாகசங்கள்.

இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை படங்கள் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்திரத்தையே முன்வைக்கின்றன. பிரிட்டிஷ் படங்களில் இந்தியாவினை ஆண்ட வெள்ளைக்காரர்களின் பெருமை மற்றும் சாகசங்கள் வியந்து போற்றப்படுகின்றன. ஹாலிவுட் படங்களிலும் இந்தியா என்பது காடுகளும் வனவிலங்கும் சாமியார்களும் ஏமாற்றுக்காரர்களும் கொண்ட ஒரு தேசம். அந்தத் தேசத்தை நல்வழிப்படுத்த வெள்ளைக்காரர்கள் மிகவும் கஷ்டப்பட்டார் என்ற பிம்பமே முன்னெடுக்கப்படுகிறது. பிரெஞ்சு இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவைப் பற்றிய படங்களே இந்தியாவின் உண்மையான முகத்தை …

கிம்மின் சாகசங்கள். Read More »

வாழ்த்துகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி. ராஜநாராயணனின் 98-ஆவது பிறந்த நாளுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கிராவிற்கு ஞானபீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன். இணைப்பு : https://youtu.be/fc_cLDMuYyc

சென்னையில் விமானம்

மதராஸில் விமானம் அறிமுகமான நாட்களில் எழுதப்பட்ட பதிவுகள் •• சென்னையில் ஆகாய யாத்திரை இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து, மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக் கூட்டின் துணையினாலே வரும் போது அதை விட்டு அதனோடு சேர்ந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக் கொண்டு தமக்குச் சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200 அடி உயர மட்டுந்தான் ஏறினார். இவர் இறங்கி …

சென்னையில் விமானம் Read More »

காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம்.

கணிப்பொறி வந்தபிறகு கையால் எதையும் எழுதுவதேயில்லை. அரிதாக வெளியூர் பயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்கள் கையால் எழுதியிருக்கிறேன். மற்றபடி 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணிப்பொறியில் தான் எழுதுகிறேன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர்கள் பலரும் டைப்ரைட்டரில் எழுதினார்கள். பாப்லோ நெரூதா தலைமறைவாக ஒளிந்து வாழ்ந்த போது கூடத் தன் கையோடு ஒரு டைப்ரைட்டரை தூக்கிக் கொண்டே அலைந்தார். அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவிற்குக் கணிப்பொறியில் எழுதுவது என்றால் பயம். அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட கணிப்பொறியை வாழ்நாள் முழுவதும் …

காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம். Read More »

ஒரே மனிதன்

தி. சுபாஷிணி அவர்கள் காந்தி கல்வி நிலையத்தில் நடைபெற்ற புத்தக விமர்சனக் கூட்டம் ஒன்றினைக் குறித்து 2011ல்  இந்தப் பதிவினை எழுதியிருக்கிறார். அதை மீள்பதிவு செய்திருக்கிறேன் •• வெங்கட் நாராயண சாலையில் தக்கர்பாபா தொழில் நுட்பப் பள்ளி வளாகத்தினுள் “காந்தி கல்வி நிலையம் உள்ளது..  இந்த கல்வி நிலையம் கடந்த 40 வருடங்களாக அங்கு செயல்பட்டு வருகின்றது. இங்கே ஒவ்வொரு புதன் மாலை 6.45க்கு தொடங்கி, 7.30 வரை ஒரு நூலைப் படித்துவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் …

ஒரே மனிதன் Read More »

காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம்

ஒரு நாளில் இரண்டு பக்கங்கள் எழுதினால் போதும் ஒரு ஆண்டிற்குள் ஒரு நாவலை முடித்துவிடலாம் என்று நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சரமாகோ சொல்கிறார். ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஒரு நாளில் இத்தனை சொற்கள் என்று வார்த்தைகளை எண்ணி எழுதக்கூடியவர்கள்.  அன்றாடம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு எழுதுவது விருப்பமான வேலையாகிவிடும். ஆனால் புதிதாக எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எழுதுவது என்பது இயலாத ஒன்றே. பெரும்பான்மை நாவலாசிரியர்கள் தனது நாவலுக்கான …

காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம் Read More »