சென்னைப் பல்கலைகழக உரை
நாளை சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ்துறை சார்பாக நடைபெறும் நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்துகிறேன் 27.01.20
நாளை சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ்துறை சார்பாக நடைபெறும் நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்துகிறேன் 27.01.20
யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதற்கான விமர்சனம்.
ஒலைக்கிளி என்ற எனது சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்த்தவர் ஜி. பாலாஜி
புகழ்பெற்ற எழுத்தாளரான ஆன்டன் செகாவிற்கு ரஷ்யாவில் நினைவில்லமும் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் சிறப்பு செகாவ் வளர்ந்த டச்ஷண்ட் நாய்களுக்கும் கூட நினைவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. செகாவ் கதைகளில் வரும் நாய்கள் மறக்கமுடியாதவை. The Lady with the Dog” கதையில் வரும் அன்னா ஒரு வெள்ளை நாய் வைத்திருக்கிறாள். இந்த நாய் அவளது அப்பாவித்தனத்தையும் இளமையையும் குறிக்கும் குறியீடு போலவே கதையில் சித்தரிக்கப்படுகிறது. கஷ்டங்கா என்ற சிறுகதையும் நாயைப் பற்றியதே. இக்கதையில் வரும் நாய் ஒரு தச்சருக்குச் …
ஆண்டுக்கு ஒருமுறை மன்னன் மீன்பிடிப்பதற்காக நளா ஆற்றிற்குச் செல்வது வழக்கம். புதிய மன்னராகப் பதவியேற்றுக் கொண்டபிறகு துங்கன் மீன்பிடிப்பதற்கு ஆர்வம் காட்டவேயில்லை. தனது எல்லையற்ற அதிகாரத்தை உலகம் அறியும்படியாக அவன் குரூரமான தண்டனைகளை அறிவித்து வந்தான். மக்களுக்குத் துங்கனின் பெயரைக் கேட்பதே அச்சம் தருவதாகியிருந்தது. துங்கனின் மூன்று மனைவிகள் ஒரே நேரத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். கள்ள உறவு குறித்த சந்தேகம் தான் காரணம் என்றார்கள். அவனது விருப்பத்திற்காக ஆண்டு முழுவதும் அவனது மாளிகை மீது மழை …
ஜேவியர் மரியாஸ் (Javier Marías) ஒரு ஸ்பானிஷ் நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளர். அவரது படைப்புகள் 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது Written Lives என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன். இது தாமஸ் மான், ரில்கே, ஆர்தர் கானன் டாயல், இவான் துர்கனேவ், ஜுனா பார்ன்ஸ், எமிலி ப்ராண்டே, மால்கம் லோரி மற்றும் கிப்ளிங் உள்ளிட்ட இருபத்தைந்து எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும் எழுத்தாளர்களின் அறியப்படாத சொந்த வாழ்க்கை குறித்தும் அவரது ஆளுமையின் தனித்துவத்தையும் விவரிக்கும் இக்கட்டுரைகள் …
தஸ்தாயெவ்ஸ்கியின் தி பிரதர்ஸ் கரமசோவ் நாவல் ஐந்து முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் யூல் பிரைனர் (Yul Brynner ) நடித்த The Brothers Karamazov 1958ல் வெளியானது. Richard Brooks இயக்கியிருப்பார். நாவலின் மையக்கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. இப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. Bratya Karamazovy (1969) என்ற ரஷ்யத் திரைப்படம் 1969ல் வெளியானது. அதுவும் முழுமையாக நாவலைச் சித்தரிக்கவில்லை. செக் மொழியிலும் பிரெஞ்சிலும் இந்நாவல் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்தத் திரைப்படமும் …
நேற்று விகடன் நம்பிக்கை விருது விழாவில் அலெக்ஸ் பால் மேனன் IAS அவர்களைச் சந்தித்தேன். சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சில தினங்களுக்கு முன்பாக அவர் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கிற்கே வந்திருந்தார் என்றார்கள். அன்று சந்திக்க முடியவில்லை. ஆனால் நேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு தேடித்தேடி படித்திருக்கிறார். இலக்கியத்தின் மீது எவ்வளவு பற்றுதல் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பழங்குடி மக்கள் நிரம்பிய பகுதியில் பணியாற்றியவர் என்பதால் அவரது …
எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் பிப்ரவரி 1 , 2020 மாலை திருவனந்தபுரத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நான் திருவனந்தபுரம் வருகிறேன். பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களும் திருவனந்தபுரத்தில் இருப்பேன்
ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறையாவது ஜென் கவிஞர் மட்சுவோ பாஷோவின் பயணக்குறிப்புகளின் தொகை நூலாகிய Narrow Road to the Interior: And Other Writingsயை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதுவரை இந்தத் தொகைநூலை பத்துக்கும் மேற்பட்ட முறை வாங்கியிருப்பேன். ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு நண்பர் வாசிக்கக் கொண்டு போய்த் திரும்பித் தராமல் போய்விடுவார். பிறகு அதன் புதிய பிரதி ஒன்றை விலைக்கு வாங்குவேன். பயணத்தில் தொலைந்து போகும் பொருட்களைப் போலவே இந்தப் புத்தகமும் மாறியிருக்கிறது. மட்சுவோ …