வாழ்த்துகிறேன்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எழுத்தாளர் வண்ணதாசன். பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா இன்று அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது. தனது கவித்துவ எழுத்துகளால் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்ந்தவர் வண்ணதாசன். அன்பின் துணை கொண்டு இந்த உலகின் குரூரங்களை, அபத்தங்களை வென்றுவிட முடியுமெனக் காட்டும் அற்புதமான படைப்புகளை உருவாக்கியவர் வண்ணதாசன். ரெனார், மோனே போன்ற புகழ்பெற்ற ஒவியர்கள் இயற்கையைத் தனது தூரிகையின் வழியே வசீகரமான ஒவியங்களாக …