கடவுளின் நாக்கு
இன்று பழனிச்சாமி என்ற பள்ளி ஆசிரியர் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்த கடவுளின் நாக்கு கட்டுரைகளை அவர் பைண்ட் செய்து வைத்திருப்பதாகவும் அதில் ஒரு கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். சென்னைக்கு வரும் போது அழையுங்கள், சந்திப்போம் என்று கூறினேன். கடவுளின் நாக்கு கட்டுரைகளை அவர் பள்ளியில் மாணவர்களிடம் அறிமுகம் செய்து வருவதாகவும், மாணவர்களால் விரும்பி ரசிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எனது நூல்களில் கடவுளின் நாக்கு விற்பனையில் பெரிய சாதனை செய்துள்ளது. இந்நூலை அதிகம் வாங்கியவர்கள் …