admin

தேவதச்சனுக்கு விருது

பொள்ளாச்சியில் செயல்படும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதச்சனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. தேவதச்சனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் ஜுலை 27 அன்று விருது வழங்கும் விழா பொள்ளாச்சி என்.ஜி. எம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன் ••••

கர்நாடகப் பயணம்

கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவின் கூர்க்கில் இருந்தேன். விட்டு விட்டுப் பெய்யும் மழை. இதமான காற்று.    காபித்தோட்டத்தின்  நடுவே அமைந்த விடுதி. மிகவும் அமைதியானது.  பரபரப்பான நகரவாழ்விலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டேன். குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும்  பௌத்த தங்கக் கோயிலை காணச் சென்றிருந்தேன்.  சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய …

கர்நாடகப் பயணம் Read More »

லிவ் உல்மான்.

Liv & Ingmar என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் திரைப்பட நடிகை லிவ் உல்மானைக்(Liv Ullmann)காதலித்து அவருடன் வாழ்ந்தார் இயக்குநர் இங்மர் பெர்க்மென். அவரது படங்களில் முக்கிய வேஷங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் லிவ் உல்மான். தங்களின் திருமண உறவு மற்றும் தீவு வாழ்க்கை, பிரிவு, பெர்க்மெனை இறுதிக்காலத்தில் மறுபடி சந்தித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு அந்தத் தீவிற்குத் திரும்பப் போன நினைவுகள் என்று தன்து வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஆவணப்படத்தில் விவரித்திருக்கிறார் லிவ் உல்மான். இத்தனை …

லிவ் உல்மான். Read More »

வாழ்த்துகள்

வால் கவிதைத்தொகுப்பிற்காக  யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள கவிஞர் சபரிநாதனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

கிராஸ்தமியின் நாய்

பீட்டர் புரூகல் வரைந்த “தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ,” உலகப்புகழ் பெற்ற ஓவியம். இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு வேட்டைக்காரர்கள் வீடு திரும்பும் பனிக்காலக் காட்சியை மிகத்துல்லியமாகப் புரூகல் வரைந்திருப்பதே. களைப்புடன் வீடு திரும்பும் வேட்டைக்காரர்கள் ஒரு புறம், மறுபுறம் தொலைதூரப் பனி மலை. அதன் அடிவாரக் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டு. விவசாயிகளின் வேலைகள். மரக்கிளையில் அமர்ந்துள்ள காகம். மூன்று வேட்டைக்காரர்களும் சோர்வடைந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் வேட்டையாடிய நரி காணப்படுகிறது. நாய்களும் சோர்ந்திருக்கின்றன. நிக்கலாஸ் …

கிராஸ்தமியின் நாய் Read More »

விண்ணாளும் பெண்கள்.

புதிய ரூ.2,000 நோட்டில் மங்கள்யான் படம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்திய விண்வெளி சரித்திரத்தில் மங்கள்யானுக்கு தனியிடம் உண்டு. மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் வழியே, முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்குச் செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைத்தது. மங்கள்யானை வடிவமைத்து, தயாரிக்க இந்தியா …

விண்ணாளும் பெண்கள். Read More »

யாதும் ஊரே

சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குச் சிறப்பான இசை வடிவம் தந்துள்ளார் இசைக்கலைஞர் ராஜன் சோமசுந்தரம். அமெரிக்காவில் வசிக்கும் இவர் இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சங்க இலக்கியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பாடல்களை மிகச்சிறப்பான இசையமைப்பில் பல்வேறு தேசங்களைச் சார்ந்த இசைக்கலைஞர்களின் பங்களிப்போடு உருவாக்கியுள்ளார். இது ஒரு அரிய சாதனை. நண்பர் ராஜன் சோமசுந்தரத்திற்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள். யாதும் ஊரே… யாவரும் கேளிர்’ என்ற, புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து மகத்தான இசையை உருவாக்கியுள்ளார் ராஜன் சோமசுந்தரம். பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரல் நம்மை மயக்குகிறது. கார்த்திக், …

யாதும் ஊரே Read More »

சிறிய கடிதம்.

லியோ டால்ஸ்டாய் தன் வாழ்நாளில் நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  அவர் எழுதிய கடிதங்கள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. டால்ஸ்டாய் எழுதிய மிகச்சிறிய கடிதம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அது Fedorov என்ற மாணவனுக்கு எழுதப்பட்ட கடிதம். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான Natasha Rostovaவின் பெயரிலுள்ள Rostovaவை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக்கேட்டு அந்த மாணவன் கடிதம் எழுதியிருக்கிறான். அதில்“O”. என்ற எழுத்தை அழுத்தமாக உச்சரிக்க வேண்டும் என்ற தொனியில் “RostOva. L. T.” என …

சிறிய கடிதம். Read More »

தெற்கு நெடுஞ்சாலை

கதை எழுதுவதற்கான கருப்பொருள் என்பது அரிதான, அபூர்வமான, அல்லது விசித்திரமான நிகழ்வாகவோ, விஷயமாகவே இருக்க வேண்டும் என்று இளம் எழுத்தாளர்கள் பலரும் நினைக்கிறார்கள். எந்த ஒரு நிகழ்வையும் அழுத்தமான கலைப்படைப்பாக உருவாக்கிவிட முடியும். அது எழுத்தாளனின் படைப்பாற்றல் சார்ந்த விஷயம். லத்தீன் அமெரிக்கச் சிறுகதையாசிரியர்களில் ஹுலியோ கோர்தஸார் வித்தியாசமான எழுத்தாளர். அவரது சிறுகதைகள் புனைவின் புதிய எல்லைகளைத் தொடுகின்றன. அடர்த்தியான மொழியும் சிதறடிக்கப்பட்ட கதை சொல்லல் முறையிலும் தொன்மத்தை மீள்வுருவாக்கம் செய்வதிலும், கனவுத்தன்மை கொண்ட நிகழ்வுகளைச் சித்தரிப்பதிலும் …

தெற்கு நெடுஞ்சாலை Read More »

மார்க்வெஸின் வாழ்க்கை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் வாழ்க்கை வரலாறு நான்கு வேறுபட்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கிறது, SUSAN MUADD DARRAJ, PELAYO RUBEN, GERALD MARTIN, ILAN STAVANS ஆகிய நால்வரில் ஜெரால்ட் மார்ட்டின் எழுதிய வாழ்க்கை வரலாறே அதிகாரப்பூர்வமானது. 642 பக்கங்கள் கொண்ட விரிவான புத்தகம். மார்க்வெஸ் தனது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை Living to Tell the Tale என்று வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் முழுமையானதில்லை. அதன் இரண்டாவது பகுதி வெளியாகும் …

மார்க்வெஸின் வாழ்க்கை Read More »