admin

சாகித்ய அகாதமி விருது

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எனது சஞ்சாரம் நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள். எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள்.  வாசகர்கள் நண்பர்கள். அனைவருக்கும் அன்பும் நன்றியும்

எலியா கஸான்.

East of Eden திரைப்படத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகளிடம் அம்மா இறந்துவிட்டார் என்று பொய் சொல்லி வளர்க்கிறார். ஆனால் அம்மா இறந்து போகவில்லை. அப்பாவோடு சண்டையிட்டு விலகிப் போய்விட்டார். இப்போது அம்மா அருகிலுள்ள ஊர் ஒன்றில் சூதாட்டவிடுதி ஒன்றை நடத்துகிறார் என்பதை அறிந்து அம்மாவைக் காணச் செல்கிறான் இளையமகன். அம்மாவைச் சந்திப்பது எளிதாகயில்லை. நிறைய கெடுபிடிகள். அவள் தனது கடந்தகாலத்தை மறைத்து வாழுகிறாள். அந்தச் சூதாட்ட விடுதிக்குள் ரகசியமாக நுழைந்து அம்மாவை சந்திக்கிறான். எதற்காக என்னைத் …

எலியா கஸான். Read More »

பனியில் ஒரு யாத்திரை

1974 ஆம் ஆண்டு இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கிற்குப் பாரீஸில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் அவரது நண்பரான லோட்டே ஐஸ்னர் என்ற எண்பது வயது பெண்மணி மரணப் படுக்கையில் இருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் இறந்து போய் விடுவார் என்று தகவல் தெரிவிக்கபட்டது தனது தோழி சாகக் கூடாது. அவரைச் சாக விடமாட்டேன் என்று லோட்டே ஐஸ்னரைக் காண ம்யூனிச் நகரிலிருந்து பாரீஸிற்கு பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டார் இயக்குனர் வெர்னர் ஹெர்சாக். (WernerHerzog). கடுங் …

பனியில் ஒரு யாத்திரை Read More »

லூக்கா எனும் மருத்துவர்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பெர் லாகர்குவிஸ்ட் (Pär Lagerkvist) எழுதிய நாவல் அன்பு வழி (Barabbas ) .இதை தமிழில் மொழி பெயர்த்தவர் க நா சு. இந்நாவல் பாரபாஸ்  என்ற குற்றவாளியின் கண்ணோட்டத்தில் இயேசுவின் வாழ்க்கையை விவரிக்கக் கூடியது. பாரபாஸ் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாக இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் என்பதை அறிந்த பாரபாஸ் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதே நாவலின் மையக்கதை. பல லட்சம் பிரதிகள் விற்றுள்ள இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. …

லூக்கா எனும் மருத்துவர் Read More »

அஞ்சலி

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார். தமிழ் பிராமி கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துத் தொகுத்த  பெருமை இவரையே சாரும். அவரது மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

தேவியின் திருப்பணியாளர்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருப்பணியாளர்கள் குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டவர் கிரிஸ் புல்லர். இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மீனாட்சியம்மன் கோவிலைப் பல்வேறு காலகட்டங்களில் கள ஆய்வு செய்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த ஆய்வேடு தமிழில் வெளியாகியுள்ளது. தேவியின் திருப்பணியாளர்கள் என்ற நூலை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலை தமிழாக்கம் செய்திருப்பவர் சி. நாகராஜபிள்ளை. மீனாட்சியம்மன் கோவிலைப் பற்றி இவ்வளவு விரிவாக ஒரு …

தேவியின் திருப்பணியாளர்கள் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் -37

கடவுளின் பறவைகள் / மியா கூட்டோ (Mia Couto)  (மொஸாபிக் ) தமிழில்: பாலகுமார் விஜயராமன் •••• மன்னித்துக் கொள்ளுங்கள், ஒரு யாத்ரீகனைப் போல எனக்கு நதியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நீரலைகள் முடிவற்ற பயணத்தில் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. எவ்வளவு காலமாக இப்படி பயணித்துக் கொண்டே இருப்பது, நீரின் வேலையாளாக இருந்திருப்பது? தனது பழைய வள்ளத்தில் தனியாக அமர்ந்திருந்த எர்னெஸ்டோ டிம்பா, தனது வாழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். பனிரெண்டாவது வயதில், நதியிலிருந்து மீன்களைப் …

எனக்குப் பிடித்த கதைகள் -37 Read More »