ராக் இசைக்குழு எனும் கனவு
ரிமா தாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள Village Rockstars படம் பார்த்தேன். சமகால இந்திய சினிமாவில் உருவாகி வரும் புதிய அலைப்படங்களில் இது ஒரு சாதனை என்றே சொல்வேன். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் கலையின் மீது விருப்பமுள்ள எவரும் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அஸ்ஸாமைச் சேர்ந்த ரிமா தாஸ் எவரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. திரைப்படப் பள்ளி எதிலும் சினிமா பயிலவில்லை. சுயமாகச் சினிமா கற்றுக் …