admin

புதிய பதிப்பு – உலக இலக்கியப்பேருரை

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, ஹோமர், பாஷோ, அராபிய இரவுகள் ஷேக்ஸ்பியர்  குறித்து ஆற்றிய இலக்கிய உரைகளின் தொகுப்பு நூல்.  எனது உரையுடன் புதிதாக எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைந்த நூலிது புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை :  325 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

தேசாந்திரி யூடியூப் சேனல்

எனது உரைகள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் சார்பில் உருவாக்கபட்டுள்ள யூடியூப் சேனலில்  பார்வைக்கு உள்ளன. நண்பர்கள் தேசாந்திரி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உதவுங்கள். புதிய வீடியோக்களை  இதிலே காணலாம். subscribe செய்வதற்கு இந்த இணைப்பைத் தொடர்பு கொள்ளவும். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 நவம்பர் 14ல் சென்னையில் நேரு கண்ட இந்தியா கருத்தரங்கில் ஆற்றிய உரை நேரு கண்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை| celebrate Nehru https://www.youtube.com/watch?v=RMKq6vaghNQ&feature=share நன்றி : ஸ்ருதி டிவி

புத்தகம் வாசிப்பவர்கள்

புத்தகம் வாசிப்பதை பல முக்கிய ஒவியர்களும் ஒவியமாகத் தீட்டியிருக்கிறார்கள். இதில் கார்ல் ஸ்பிட்ஸ்வெக் (Carl Spitzweg) முக்கியமான ஒவியர். இவர் புத்தகம் வாசிக்கும் படிப்பாளிகள் பற்றி நிறைய ஒவியங்கள் வரைந்திருக்கிறார். இதில் மிகச்சிறந்த ஒவியம் புத்தகப்புழு. கார்ல் ஸ்பிட்ஸ்வெக் 1808 ஆம் ஆண்டில் ம்யூனிச் நகரில் பிறந்தார். கவிஞரான இவர் சுயமுயற்சியால் ஒவியம் வரைய கற்றுக் கொண்டார். இவரது தந்தை ஒரு மருந்துக்கடை வைத்திருந்தார். ஆகவே கார்ல் ஸ்பிட்ஸ்வெக்கும் அதே தொழிலில் ஈடுபட்டு வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் …

புத்தகம் வாசிப்பவர்கள் Read More »

நேரு கண்ட இந்தியா

மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் கலந்து கொண்டு நேரு கண்ட இந்தியா என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். நாள் : நவம்பர் 14 புதன்கிழமை நேரம் : மாலை ஆறுமணி இடம் : மக்கள் விழிப்புணர்வு மையம் 54. ராஜாஜி சாலை துறைமுகம்.

மோனேயின் நீர் அல்லிகள்

பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே (Claude Monet – 1840-1926) இயற்கையை துல்லியமாக வரைவதில் முதன்மையானவர். இவரது ஒவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் கண்டிருக்கிறேன் Water Lilies என்ற ஒவிய வரிசை அபாரமானது. இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. இயற்கையை நேரில் காணும் போது பெரிய பொருட்கள் மட்டுமே கண்ணில் விழுகின்றன. அவற்றையே மனம் பிரதானமாக அவதானிக்கிறது. உள்வாங்கிக் கொள்கிறது. காற்றினால் தண்ணீரில் ஏற்படும் அலைகளையோ, ஒளி ஊடுருவி விளையாடுவதையோ. பூக்களின் திறந்த …

மோனேயின் நீர் அல்லிகள் Read More »

நுவ்வை

பிரெஞ்சு எழுத்தாளரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான ஜீன் க்ளாட் காரியரின்(jean claude carrier) நேர்காணல் ஒன்றை கண்டேன். அதில் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் தொன்றுதொட்டு பின்பற்றிவரும் ஒரு பழக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் போது அந்தச் சந்தோஷத்தின் அடையாளமாக ஒரு மரம் வைக்கப்படுமாம். காரியர் பிறந்த போது அவரது தந்தை வால்நட் மரத்தை வைத்திருக்கிறார். அது பதினெட்டு ஆண்டுகள் வளர்ந்து பின்பு விழுந்துவிட்டது என்கிறார் காரியர். அத்தோடு காரியர் தனது …

நுவ்வை Read More »

ஏங்கெல்ஸின் மனைவி

கார்ல் மார்க்ஸின் இணைற்ற நண்பனாகவும், சிறந்த தோழனாகவும் விளங்கியவர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ் ஏங்கெல்ஸின் மனைவி லிடியா எனப்படும் லிசி பென்ஸ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய நாவல்-Mrs Engels வெளியாகியுள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான கெவின் மெக்ரே இதனை எழுதியிருக்கிறார். லிசி பென்ஸ் தோழர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸின் துணைவி. ஐரீஷ் பெண்ணான இவர் பஞ்சாலை ஒன்றில் சாயமிடும் தொழிலாளியின் மகள்., அவரது சகோதரி மேரி பர்ன்ஸை தான் ஏங்கெல்ஸ் காதலித்தார். மான்செஸ்டரில் மேரியுடன் ஏங்கெல்ஸ் ஒன்றாக வாழ்ந்த போது …

ஏங்கெல்ஸின் மனைவி Read More »

சுராவிற்குப் பிடித்த சினிமா

எழுத்தாளர் சுந்தர ராமசாமி அபூர்வமாகத் திரைப்படங்கள் குறித்து எழுதியிருக்கிறார். பேசியிருக்கிறார். தனிப்பட்ட சந்திப்புகளின் போது சினிமா குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்ததை அறிவேன். ஆனால் தனக்குப் பிடித்த படங்கள் பற்றியோ, சினிமா இயக்குனர்கள பற்றியோ அதிகம் எழுதியதில்லை. அடூர் பற்றியும் சத்யஜித் ரே பற்றியும் எழுதியிருக்கிறார் என்று நினைவு. அவரது குறிப்பு ஒன்றில் Fried Green Tomatoes திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். அது புகழ்பெற்ற படமில்லை. ஆனால் நேர்த்தியாக …

சுராவிற்குப் பிடித்த சினிமா Read More »

கவிஞர் தேவதச்சனுக்கு விருது

கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான கவிக்கோ விருது வழங்கப்படுகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் பணமும் பாராட்டு பத்திரமும் கொண்டது. நவீன தமிழ் கவிதையுலகின் நிகரற்ற கவியாக விளங்கும் தேவதச்சனுக்கு இவ் விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். விருது வழங்கும் நிகழ்வு நவம்பர் 9 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள சோலை அரங்கத்தில் நடை பெறுகிறது.