தீபாவளி மலரில்
ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் எனது சிறுகதை பாங்கிணறு வெளியாகியுள்ளது.
ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் எனது சிறுகதை பாங்கிணறு வெளியாகியுள்ளது.
பிரசாந்தி சேகர் எழுதிய காஃப்கா பற்றிய கட்டுரை ஒன்றை சில வருஷங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். மிகச்சிறந்த கட்டுரை. நினைவிலேயிருந்தது. நேற்றிரவு திடீரென அதை மீண்டும் வாசிக்க வேண்டும் போலிருந்தது. காலச்சுவடு இணையதளத்தில் தேடி மீண்டும் வாசித்தேன். அபாரமான மனஎழுச்சிதரக்கூடிய கட்டுரை. இதுவரையாரும் காஃப்கா பற்றி இப்படியொரு கட்டுரையை எழுதியதில்லை. ஒரு எழுத்தாளனை மிகத் தீவிரமாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும். தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழை கோணங்கி கல்குதிரைக்காக கொண்டுவந்த போது கவிஞர் தேவதச்சன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினார். …
ஆன்டன் செகாவ் தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் எழுதவிரும்பிய கதைக்கருக்களைத் தனது நோட்புக்கில் குறித்து வைத்திருக்கிறார். செகாவின் நோட்புக் தனிநூலாக வெளியாகியுள்ளது. சிறுகதை எழுத விரும்புகிறவர்களுக்கு இது ஒரு அற்புதமான துணை நூல். குறிப்பாக வித்தியாசமான கதாபாத்திரங்களை எப்படி வாழ்விலிருந்து தேர்வு செய்கிறார், எது போன்ற சம்பவங்களைக் குறித்து வைத்திருக்கிறார் என்பது முக்கியமானது. ஒவியர்கள் தினசரி வாழ்வு குறித்து ஸ்கெட்புக்கில் வரைந்து வைத்திருப்பது போலத் தன் கண்முன்னே கடந்து போன வாழ்வை சிறிய …
இந்த வார விகடன் (4500 வது )சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள நேர்காணல் 05.10.2017
இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா.கிருஷ்ணன் எழுதிய கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற துப்பறியும் நாவல் 1996ம் வெளியானது. பதிமூன்று வருசங்களுக்கு மேலாகியும் உரிய கவனமற்று போன அந்த நாவல் 2009ம் வருசம் புதிய பதிப்புக் கண்டிருக்கிறது. மா. கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியர் ஆ. மாதவைய்யாவின் மகன். தாவரவியலும் சட்டமும் படித்துவிட்டு சுண்டூர் சமஸ்தானத்தில் பணியாற்றியிருக்கிறார். புகைப்படம் எடுப்பதிலும் ஒவியத்திலும் ஆர்வம் கொண்ட கிருஷ்ணன் ஸ்டேட்ஸ்மென் இதழில் எழுதிய இயற்கையுலகம் பற்றிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. கானுயிர் …
கோலம் வழங்கும் அசோகமித்திரன் விருது 2016-17 அசோகமித்திரனின் பத்து முகங்கள் – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை https://www.youtube.com/watch?v=5JwKkQW3Vls
எனது சிறுகதையை மோகன்குமார் குறும்படமாக சிறப்பாக உருவாக்கியுள்ளார். BurraaH Tamil short film Directed By Mohankumar https://youtu.be/OqSYjR30DLU
Singapore Writers Festival 2017 ல் கலந்து கொள்வதற்காக நவம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூர் வருகை தர இருக்கிறேன். இது ஒரு சர்வதேச எழுத்தாளர் விழா. இந் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதோடு சிங்கப்பூர் எழுத்தாளர்கள், வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்த இருக்கிறேன் சிங்கப்பூரில் உள்ள இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம். தங்குமிடம், நேரம் குறித்து அறிந்து கொள்ள மின்னஞ்சல் அனுப்பவும் writerramki@gmail.com
நவம்பர் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ள ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கபட்டிருக்கிறேன். உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி திகழ்கிறது. இதில் 59 நாடுகள் கலந்து கொள்கின்றன. நவம்பர் 3 இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இலக்கிய அமர்வில் கலந்து கொள்கிறேன். இதற்காக நவம்பர் 2 ல் ஷார்ஜா வருகை தருகிறேன். அங்குள்ள இலக்கிய நண்பர்கள். வாசகர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் …