admin

சிங்கப்பூரிலிருந்து

சிறுவர்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம் நூலை வாசித்துவிட்டு 13 வயதான சூரியநிலவன் எழுதியுள்ள கடிதம். சிங்கப்பூரில் வசிக்கும் சூரியநிலவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அன்பும் பாராட்டுகளுக்கும். சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு நன்றி. ••• நான் சூரியநிலவன், 13, சிங்கப்பூர். கடந்த வியாழக்கிழமை நான் நூலகத்துக்குச் சென்றிருந்தேன். எப்பொழுதும் என் அப்பா இரவல் பெறும்போது தமிழ்ப்புத்தகத்தையும் இரவல் பெறக் கூறுவார்.நானும் வேண்டாவெறுப்பாக ஒன்றை எடுத்துக்கொண்டு வருவேன். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை.நீங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் நூலக …

சிங்கப்பூரிலிருந்து Read More »

கூட்டத்தின் மனநிலை

1981ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்  எலியாஸ் கானெட்டி. ஜெர்மன் மொழி எழுத்தாளரான இவர் எழுதிய Crowds & Power மிக சுவாரஸ்யமான புத்தகம். மனிதர்கள் ஏன் கூட்டமாகத் திரளுகிறார்கள். கூட்டத்தின் மனநிலை எப்படி உருவாகிறது. ஏன் கூட்டம் சேர்ந்தவுடன் வன்முறை ஏற்படுகிறது. தனிநபர் கூட்டத்தின் வழியாக என்ன மனநிலையை அடைகிறார். எது போன்ற கூட்டங்களைச் சமாளிக்க முடிவதில்லை என்று கூட்டத்திற்கும் அதிகாரத்திற்குமான உறவைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய …

கூட்டத்தின் மனநிலை Read More »

உப பாண்டவத்திற்குப் பின்னால்

என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியில் ஒருவன். சென்னை புக்ஸ் நிறுவனத்தால் வெளியிட்டது. இந்தத் தொகுப்பை நான் உருவாக்கவில்லை. வெவ்வேறு இதழ்களில் வெளியான எனது சிறுகதைகளைத் தொகுத்து எழுத்தாளர் தமிழ்செல்வன் சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்தார். என் மீதான அன்பில் அவரே புத்தகம் வெளியிட்டு விட்டதால் முதற்புத்தகம் கொண்டுவருவது பெரிய சிரமமின்றி எளிதாக நடந்துவிட்டது. ஆனால் முதல்நாவலான உப பாண்டவத்தைக் கொண்டு வர பெரும்போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது சென்னையை விடுத்து விருதுநகரில் குடியிருந்தேன். திருமணமாகியிருந்தது. வேலை எதுவும் …

உப பாண்டவத்திற்குப் பின்னால் Read More »

நீட் தேர்வுக்கு எதிராக

நீட் தேர்வு மருத்துவம் பயில நினைக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவுகளை அழிக்கக்கூடிய ஒன்றாக  தமிழ்நாட்டில் புகுந்துள்ளது. நாம் நீட் தேர்வை அனுமதிக்க கூடாது. அனிதாவின்  மரணம் பெரும் இழப்பாகும். இதற்கு காரணமாக இருந்த மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அனைவரும் இணைந்து போராடுவோம்.  நம் குரல் தமிழக மக்களின் கல்வியுரிமைக்கான ஒற்றைக்குரலாக ஒலிக்க வேண்டும்.

நெருதா துரத்தப்படுகிறார்

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதா குறித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படம் நெருதா. சிலே தேசத்தின் பிரபல இயக்குனர் Pablo Larrain இயக்கியிருக்கிறார்.சிலே கம்யூனிஸ்ட் கட்சியின் செனட்டராக நெருதா பணியாற்றினார். அதிலிருந்தே படம் துவங்குகிறது. 1946 ஆம் ஆண்டில், சிலேயின் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரிகளின் சார்பில் நின்ற கேப்ரியல் கோன்சல்ஸ் விதேலாவிற்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் நெருதா. விதேலா தேர்தலில் வெற்றிபெற்றபின், சிலே கம்யூனிஸ்ட் கட்சியுடன் சண்டையிட்டு கம்யூனிஸ்டுகளைத் தனதுஅமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார். பின்னர் ஜனநாயக பாதுகாப்பு சட்டத்தின் …

நெருதா துரத்தப்படுகிறார் Read More »

நைல் நதியின் ஊடே

டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன். சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது என்பதே இதன் …

நைல் நதியின் ஊடே Read More »

கோணங்கி

எனது தாவரங்களின் உரையாடல் சிறுகதை தொகுப்பு குறித்து 1998ல் கோணங்கி எழுதிய விமர்சனம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்தேன். இது காலக்குறி இதழில் வெளியானது என நினைக்கிறேன். தாவரங்களின் உரையாடல் என்னை அடையாளப்படுத்திய சிறுகதை தொகுதி. அதன் புதியபதிப்பு தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது. அந்த மகிழ்வில் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் •••• தாவரங்களின் மொழிவலையில் விரியும் கதைப்பரப்பு – கோணங்கி எஸ். ராமகிருஷ்ணனின் மூன்றாவது கட்டக்கதைகள் பதினெட்டில் ஊடுருவியபோது பனிரெண்டு கதைகளுக்குள் சந்தடியற்ற காலடிகளோடு நெருங்கும் …

கோணங்கி Read More »

தமிழ் சங்கங்கள்

கேள்வி 1: தமிழ் இலக்கியப் படைப்புகள் உலகளாவிய அளவில் மற்ற நாட்டின் அறிஞர் /எழுத்தாளர்களால் எத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது? பொதுவாக இந்தியாவெங்கும் தமிழ் இலக்கியம் என்றால் பழந்தமிழ் இலக்கியம் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். நவீன தமிழ்இலக்கியம் பற்றி பிற மாநிலங்களுக்கு அதிகம் தெரியாது. இந்திய அளவிலான இலக்கியக்கூட்டங்களுக்குப் போகும் போதெல்லாம் அவர்கள் வியப்போடு இப்படி எல்லாம் தமிழில் எழுதுகிறார்களா எனக்கேட்கிறார்கள். இன்றைய இலக்கியம் குறித்து இந்திய மொழிகளில் அறிமுகமேயில்லை.  பின்பு எப்படி உலக அரங்கிற்குத் தெரிந்திருக்ககூடும். வெளிநாட்டுப் …

தமிழ் சங்கங்கள் Read More »

இடக்கை– நூல் விமர்சனம்

– கணேஷ் பாபு  சிங்கப்பூர் வரலாற்றின் நீண்ட பயணத்தில், மனிதன் அதிகமும் நம்பிக்கைவைத்திருந்தது நீதியின் மீதுதான். சமூகமாக மனிதன் வாழத் துவங்கியதிலிருந்து அவன் தனது வாழ்வின் காப்பாக நீதியைத்தான் நம்பிவந்திருக்கிறான். அதே சமயம் அவன் அச்சம் கொண்டது, நீதியை கையாள்பவர்களிடமும், நீதியை தீர்மானிப்பவர்களிடமும்தான். இந்தப் புள்ளியில்தான் அதிகாரம் என்ற மாபெரும் சக்தியை மனிதன் எதிர்கொள்ள நேர்கிறது. தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நீதியை செலுத்தக்கூடிய கரங்கள் அதிகாரம் என்ற பீடத்தில்தான் நிலைகொண்டுள்ளது என்று அறியநேர்கையில் மனித மனதில் …

இடக்கை– நூல் விமர்சனம் Read More »

உறுபசி நாவல் பற்றி

உறுபசி நாவல் பற்றி சரவணன் என்ற வாசகர் எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு. •• உறுபசி. படித்து முடித்தவுடன் இதை எழுதுகிறேன். சம்பத் என்னும் நண்பனை , அவன் இறப்பின் பின் நினைவுகளின் வழி மீண்டும் தொட்டு மீண்டு வரும் மூன்று நண்பர்கள் பற்றியது. எப்போதும் இறப்பு ஒருவரின் நினைவுகளை கிளர்ந்து எழ செய்பவையே. அந்த வகையில் சம்பத்துடன் விருப்பமற்று தொடர்பில் இருக்கும் அவர்களுக்கு , அவன் வாழ்வின் மேல் ஒரு கசப்பும் அசூயையும்  உள்ளது. இந்த கசப்பு , …

உறுபசி நாவல் பற்றி Read More »