admin

காரல் மார்க்ஸ் – உரை

நேற்று திருப்பூரில் நடைபெற்ற காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவில் உரையாற்றினேன். மார்க்ஸ் பற்றிப் பேசப்பேச உணர்ச்சிவசம்மீறி என்னை அறியாமலே கண்ணீர் சிந்தும்படியானது. பெரும்பான்மையான உரைகளில் பேச்சை என் கட்டுக்குள் தான் வைத்திருப்பேன். இது போல சில தருணங்கள் பேச்சு இழுத்துக் கொண்டுபோய்விடுகிறது. மார்க்ஸ் பற்றிய உரைக்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மார்க்ஸின் வரலாற்றையும் தத்துவங்களையும் வாசித்தது புத்துணர்வு தருவதாகயிருந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தோழர் ஈஸ்வரனுக்கும், தலைமை ஏற்றி நடத்திய தோழர் எஸ். ஏ.பெருமாளுக்கும். …

காரல் மார்க்ஸ் – உரை Read More »

இலங்கை பயணம்

எட்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன். கிழக்கு மாகாண இலக்கியவிழாவில் சிறப்புரையாற்ற எழுத்தாளர் உமா வரதராஜன் அழைத்திருந்தார். கொழும்பில் துவங்கி யாழ்பாணம் வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தேன். இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாகப் பார்வையிட்டேன்.  இந்த பயண அனுபவம் குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த பயணத்தில்எழுத்தாளர்கள் உமா வரதராஜன், ஹசீன்,  எஸ்.எல்.எம்.ஹனீபா, ஒட்டமாவடி அறபாத், திசேரா,மலர்செல்வன்.குழப்பிழான் சண்முகம், சாந்தன்,   யதார்த்தன் , கே.எஸ். சிவக்குமாரன், எம்.எம். நௌஷாத், சித்தாந்தன், பௌசர்  சிராஜ் …

இலங்கை பயணம் Read More »

நன்றி

தேசாந்திரி பதிப்பகம்  குறித்து வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. தேசாந்திரி சார்பில் புதிய புத்தகங்கள் ஜனவரி 2018 சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படும் பதிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. •••

இலக்கிய தர்பார்

ஆகஸ்ட் 13 ஞாயிறு காலை 11 மணிக்கு  பொதிகை தொலைக்காட்சியில் நான் கலந்து கொண்ட இலக்கிய தர்பார் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. Ilakkiya Durbar Promo on 13-08-2017 https://youtu.be/WMNzQOrC-Mo

தேசாந்திரி பதிப்பகம்

எனது நூல்களை வெளியிடுவதற்காகத் தேசாந்திரி என்ற புதிய பதிப்பகத்தைத் துவக்கியுள்ளேன். இனி எனது நூல்கள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் வழியாகவே வெளியாகும். நண்பர் மனுஷ்யபுத்திரன் தனது உயிர்மை பதிப்பகத்தின் வழியே எனது 80க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். என் எழுத்துலக பணியில் உயிர்மையின் துணை மிகுந்த நன்றிக்குரியது. ஆயினும் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் இனி எனது நூல்களை நானே வெளியிடுவது என முடிவு செய்துள்ளேன். உயிர்மை, விஜயா, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள எனது நூல்கள் அச்சிடப்பட்ட பிரதிகள் …

தேசாந்திரி பதிப்பகம் Read More »

தேவதச்சனுக்கு விருது

உயிர்மை வெளியிட்டதேவதச்சனின் ‘ மர்ம நபர்’ கவிதைத் தொகுப்பிற்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது. அவருக்கு என் அன்பும் வாழ்த்துகளும் சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வரும் 31 ஆந்தேதி இந்த விருது வழங்கப்படும். மர்ம நபர் கவிதைத்தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் ( 206- 207) கிடைக்கிறது ••

வாசிப்பில் இன்று -1

இன்று காலை Anthony Burgess எழுதிய Abba Abba நாவலை வாசித்தேன். 120 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல் ** கீட்ஸின் மறுமொழி. ஆன்டனி பர்கஸ் எழுத்தாளர்களைப் பற்றி நாவல்கள் எழுதக்கூடியவர். இவர் ஷேக்ஸ்பியர் , மார்லோ பற்றி எழுதிய நாவல்கள் சுவாரஸ்யமானவை. புகழ்பெற்ற கவிஞரான கீட்ஸ் மற்றும் பெல்லி குறித்து இவர் எழுதிய சிறுநாவல் Abba Abba 1821 பிப்ரவரி 23ல் தனது இறந்து போனார் கீட்ஸ், அப்போது அவரது வயது 25. காசநோயால் பாதிக்கபட்ட …

வாசிப்பில் இன்று -1 Read More »

புதிய பதிப்புகள்

இடக்கை, பதின் ஆகிய நாவல்களின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. ராயப்பேட்டையில் நடைபெறுகிற புத்தக கண்காட்சியில் வாங்கிக் கொள்ளலாம் சென்னை புத்தகக் கண்காட்சி . ராயப்பேட்டை ஒஎம் சி ஏ உயிர்மை அரங்கு எண் 206-207 •• ஔரங்கசீப்பின் இறுதிநாட்களை மையப்படுத்தி மத்திய இந்தியாவின் அரசியலைப் பேசும் நாவல். நீதிமறுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கிறது. பதின் வயதின் மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் புதுவகை நாவல்.

அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும்

தனிமையின் துயரத்தையும் , பிரிவின் ஏக்கத்தையும், காதலின்வலியையும் , பொருந்திக் கொள்ளமுடியாத தினசரி வாழ்வின் மீதான சலிப்பையும் பேசுபவை உமா வரதராஜனின் சிறுகதைகள். பேருந்து நிலையத்தின் பரபரப்பிற்கு ஊடாகத் திடீரெனக் கேட்கும் புல்லாங்குழல் நம்மை ஈர்ப்பது போல இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளுக்கு இடையே அன்பின் பாடலை ஒலிக்கின்றன.. உமா வரதராஜனின் அரசனின் வருகை சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஈழச்சிறுகதை வரலாற்றில் அதற்குத் தனியிடம் உண்டு. அவரது சிறுகதைகள் சிலவற்றைத் தனியே வாசித்திருந்த போதும் மொத்தமாக அவரது 16 …

அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும் Read More »