admin

கடவுளின் நாக்கு

தி இந்து நாளிதழில் செவ்வாய்கிழமை தோறும் நான் எழுதிவரும் கடவுளின் நாக்கு என்ற பத்தி ஒராண்டினைக் கடந்து செல்கிறது. இதைச் சாத்தியமாக்கிய தி இந்து ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், மானா பாஸ்கர் ஆகியோருக்கு அன்பும் நன்றியும். கல்வி நிலையங்களில் இந்தப் பத்தியை மாணவர்கள் கூடி வாசிக்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் வகுப்பறையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நீதியரசர் துவங்கி சலூன்காரர் வரை பல்தரப்பட்டவர்கள் இதை வாசித்துப் பாராட்டுகளைத் தெரிவித்து வருவது சந்தோஷம் அளிக்கிறது. பத்தி குறித்து ஒவ்வொரு …

கடவுளின் நாக்கு Read More »

சுட்டிவிகடன்

இன்று (9.07.2017) காலை அண்ணா பல்கலைகழக அரங்கில் சுட்டிவிகடன் சார்பில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்காக கதைகள் எழுதுவது எப்படி என்பது குறித்து  உரையாற்றினேன் தமிழகம் முழுவதுமிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டார்கள். விஷ்ணுபுரம் சரவணன், விழியன், வேலு சரவணன், கணேசன் கோதண்டராமன் போன்ற நண்பர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது புகைப்படம் நன்றி விழியன்

அன்பும் நன்றியும்

நேற்று டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற்ற எனது இரண்டு நூல்களின் விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பவித்ரன் மற்றும் சுந்தரபுத்தன் இருவரும் நிலவழி பற்றி விரிவாகப் பேசியது சந்தோஷம் அளித்தது. அரங்கு நிறைய இளைஞர்கள். பலரையும் முதன்முறையாகப் பார்க்கிறேன். இத்தனை பேர் இலக்கியத்தைத் தீவிரமாக வாசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது சைக்கிள் கமலத்தின் தங்கை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எனது கதைகளின் உலகம் பற்றி மிக நுட்பமாக எடுத்துப் பேசினார் அகரமுதல்வன். அது போலவே கார்த்திக் புகழேந்தியும் தொகுப்பில் தனக்கு எந்தக் …

அன்பும் நன்றியும் Read More »

நட்சத்திரங்களுக்கு இடையே

அந்த்வான் து செந்த் எக்சுபெரி மிகச் சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர். இவர் எழுதிய குட்டி இளவரசன் எனக்கு மிகவும் பிடித்த நாவல், பலமுறை வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் ஊற்றுக்கண்ணைப் போன்றுள்ளது காற்று, மணல், நட்சத்திரங்கள் என்ற எக்சுபெரியின் விமானப்பயணம் பற்றிய நூல். சமீபத்தில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் குட்டிஇளவரசனை விடவும் சிறப்பானது. வெ. ஸ்ரீராம் வெகுஅற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார். பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழிற்கு மொழியாக்கம் செய்துவருபவர் வெ. ஸ்ரீராம். இவரது சேவையைப் பாராட்டி ஃப்ரான்ஸ் அரசு …

நட்சத்திரங்களுக்கு இடையே Read More »

எல்.வி.பிரசாத்.

தமிழ் திரையுலகின்  மிகமுக்கிய ஆளுமைகளில் ஒருவர் எல்.வி.பிரசாத். இவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளியான படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன. பிரசாத் லேப், மற்றும் பிரசாத் அரங்குகள்  இன்றும் அவரது பெருமை கூறுகின்றன. இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்த போது எல்.வி. பிரசாத் அவர்களின் பழைய புகைப்படங்கள் காணக்கிடைத்தன.   அதைக் காணும் போது ஏனோ பரவசமாக இருந்தது. பிரபல ஒளிப்பதிவாளர் மார்கஸ் பட்லேயின் புகைப்படத்தை இதில் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன். அபூர்வமான புகைப்படமது ராஜ பார்வை படத்தில்  எல்.வி.பிரசாத் …

எல்.வி.பிரசாத். Read More »

விமர்சனக்கூட்டம்

ஜுலை 8 சனிக்கிழமை மாலை எனது இரண்டு நூல்களின் விமர்சனக்கூட்டம் நடைபெறவுள்ளது டிஸ்கவரி புக் பேலஸ் இதை நடத்துகிறது. நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அழைக்கிறேன் ••

எஸ்.வி.ஆர் எனும் மகத்தான ஆளுமை

தோழர் எஸ்.வி. ராஜதுரை  உலக இலக்கியம் சார்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள கல் தெய்வம், சாட்சி சொல்ல ஒரு மரம், பார்வையிழத்தலும் பார்த்தலும், ஆகிய மூன்று புத்தகங்களும் மிக முக்கியமானவை. அவற்றை சமீபமாக ஒருசேர வாசித்தேன்.  அற்புதமான கட்டுரைகள். தமிழ் அறிவுலகத்திற்கு எஸ்.வி.ஆர் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது. ரஷ்யப் புரட்சி : இலக்கியச் சாட்சியம், அந்நியமாதல். பெரியார் : ஆகஸ்ட் 15 உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். எஸ்.வி.ஆரின் இலக்கியவாசிப்புப் பிரமிப்பூட்டக்கூடியது. சர்வதேச இலக்கியங்களைத் …

எஸ்.வி.ஆர் எனும் மகத்தான ஆளுமை Read More »

லிங்கம் புகைப்படங்கள்

வேலூர் லிங்கம் பற்றி எழுதியிருந்ததை அடுத்து நண்பர்கள் பலரும் அவர் குறித்து விசாரித்தும் பாராட்டியும் வருகிறார்கள்.   தஸ்தாயெவ்ஸ்கிக்கு மலர் தூவி வழிபடுகிறார் என்பதை அறிந்து அந்த புகைப்படங்களைப் பகிர முடியுமா  எனக்கேட்டிருந்தார்கள் வேலூர் லிங்கம் இல்லப் புகைப்படங்கள். புகைப்படங்கள் Harshi sabay