admin

தனிமையெனும் தீவு

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இடையில் அடிப்படையிலே வேறுபாடிருக்கிறது. வெறும்பொழுதுவிஷயங்களைத் தாண்டி, காட்டை அழித்து இயற்கை வளங்களை நாசப்படுத்துவது குறித்தும். போருக்கு எதிராகவும், வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்தும், தொழில்மயமாதல், நகர்மயமாதலின் விளைவுகள் பற்றியும், சிறார்களின் வியப்பபூட்டும் கனவுகள். கற்பனைகள் பற்றியும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேசுகின்றன. அதீத வன்முறைக்காட்சிகள். இன மதத் துவேசம் எதையும் ஜப்பானிய அனிமேஷனில் காணமுடியாது. மூத்தோர்களின் வழிகாட்டுதலும் ஞானமும் அவசியமானது. இயற்கையோடு இணைந்து வாழுதல் முக்கியம். உறுதியான நம்பிக்கையும் …

தனிமையெனும் தீவு Read More »

இளம்பகவத்

இளம் ஐஏஎஸ் அதிகாரியான இளம்பகவத் நேற்று தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தார். ஐஏஎஸ் தேர்விற்காகத் தயாராகும் பலரும் என்னை வந்து சந்திப்பதுண்டு. தமிழ் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள் சார்ந்து விவாதிப்பார்கள். விகடனில் கதாவிலாசம் எழுத துவங்கிய நாள் முதல் இளம்பகவத் என்னைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார். இந்திய ஆட்சிப்பணியில் உள்ள பலர் தீவிர இலக்கியவாசிப்புக் கொண்டவர்கள் என்பதை அறிவேன். தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117வது இடம்பிடித்துச் சாதனை …

இளம்பகவத் Read More »

வேலூர் லிங்கம்

தஸ்தாயெவ்ஸ்கியைத் தீவிரமாக வாசிப்பவர்கள் பலர் இருக்ககூடும். ஆனால் வேலூர் லிங்கம் அளவிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியை ஒருவர் நேசிக்க முடியுமா என்பது சந்தேகமே. 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது ஒய்வு பெற்று வேலூரில் வசிக்கிறார். தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் நண்பர். இலக்கியவிழாக்களைத் தேடித்தேடி கலந்து கொள்ளக்கூடியவர். அவரது வீட்டிற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். வீட்டின் முகப்பில், ஹாலில், அறைகளில். மாடியில் என எங்கும் புத்தகங்கள். நூலகத்தில் கூட இவ்வளவு சிறந்த புத்தகங்கள் இருக்குமா என …

வேலூர் லிங்கம் Read More »

எட்வர்ட் ஹாப்பர்

ஒவியத்தில் உறைந்து போன காட்சிகளை உயிரோட்டமாகத் திரையில் மறுஉருவாக்கம் செய்வது மிகப்பெரிய சவால். அதுவும் எட்வர்ட் ஹாப்பர் போன்ற அமெரிக்காவின் மிக முக்கிய ஒவியரின் ஒவியங்களை அதே வண்ணங்களுடன் காட்சிக்கோணங்களுடன் திரையில் உருவாக்கிக் காட்டுவது எளிதானதில்லை. Shirley: Visions of Reality (2013) என்ற Gustav Deutsch இயக்கிய திரைப்படம் எட்வர்ட் ஹாப்பரின் 13 ஒவியங்களை ஒன்றிணைந்து காட்சிப்படுத்தியிருக்கிறது. இயக்குனரான குஸ்தாவ் ஒரு ஒவியர் என்பதால் எட்வர்ட் ஹாப்பரை மிகவும் ஆசையுடன் திரையில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் பிரபல …

எட்வர்ட் ஹாப்பர் Read More »

கோ யுன்

உலகக் கவிதையரங்கில் கொரியக்கவிஞர் கோ யுன் (Ko Un) மிகப்பெரும் கவியாக கொண்டாடப்படுகிறார். இரண்டு முறை இவரது பெயர் நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அரசு எதிர்ப்பின் காரணமாக சிறையில் அடைக்கபட்ட கோ யுன் இருட்டறையில் வாழ்ந்த போது அவருக்குக்கிருந்த ஒரே துணை சூரிய வெளிச்சம் மட்டுமே. துளை வழியாக உள்ளே வரும் அந்த வெளிச்சத்தை கடலாகவே அவர் கருதினார். இதுவரை 155 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்.  கவிதையுலகில் இது பெரும்சாதனை. பதினைந்து மொழிகளில் இவரது கவிதைகள் …

கோ யுன் Read More »

காமரூபத்தில் உலவும் நிழல்கள்

ஞானபீடப்பரிசு பெற்ற அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி. இவரது தென்காமரூபத்தின் கதை என்ற நாவல் 2011ல் வெளியாகியுள்ளது. சாகித்திய அகாதமி இதனை வெளியிட்டுள்ளது. தென்காமரூபத்தின் கதையைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் அ. மாரியப்பன். இவர் தில்லி பல்கலைகழகத்தில் தமிழ்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அஸ்ஸாமியர்களால் தங்களின் அன்புக்குரிய பாய்தேவ் (மூத்த சகோதரி) என்று அழைக்கப்பட்டவர் இந்திரா கோஸ்வாமி என்ற மாமோனி ராய்சோம் கோஸ்வாமி இவர் இரவீந்திரபாரதி பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார், அஸ்ஸாம் ரத்னா, சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட …

காமரூபத்தில் உலவும் நிழல்கள் Read More »

அஞ்சலி

கவிக்கோ அப்துல்ரகுமானின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். கல்லூரி நாட்களில் அவரது பால்வீதி படித்து வியந்து கவிஞர் மீராவின் மூலமாகக் கவிக்கோ அவர்களைச் சந்தித்துப் பழகத்துவங்கினேன். சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வருவேன். நிறையப் புத்தகங்கள். இசைநாடாக்களைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அவர் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழன் என்ற நாளிதழில் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். மறக்கமுடியாத நாட்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகக் குற்றாலத்தில் கவிக்கோ நடத்திய இஸ்லாமிய இலக்கியக்கருத்தரங்கிற்குச் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். அவருடன் தென்காசி …

அஞ்சலி Read More »

தடம் இதழில்

இம்மாத தடம் இதழில் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் விரும்பிய செவ்வியல் இலக்கியங்கள். எழுதிய கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன் ••

இலக்கியப் பெட்டி

குறும்பட இயக்குனரும் சிறந்த இலக்கியவாசகருமான பவித்ரன் இலக்கியப்பெட்டி என்ற இணைய காணொளித் தொடர் ஒன்றை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் சிறந்த புத்தங்களைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்துகிறார்.  எனது சமீபத்திய நாவல் மற்றும் கட்டுரைத் தொகுப்பை சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். பவித்ரனுக்கு என் அன்பும் பாராட்டுகளும் இலக்கியப் பெட்டி (Literature Box ) பதின் – எஸ். ராமகிருஷ்ணன் (paththin – S Ramakrishnan) https://youtu.be/IBYY16N3RxE நிலவழி – எஸ். ராமகிருஷ்ணன்; இந்திய இலக்கிய ஆளுமைகள் https://youtu.be/VIMjy1-qThI