வம்சி பதிப்பகம்
புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தில் எனது நூல்கள் கிடைக்கின்றன
புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பகத்தில் எனது நூல்கள் கிடைக்கின்றன
shruti.tv யை நடத்தி வரும் நண்பர் கபிலன் எனது இலக்கியநிகழ்ச்சிகள் அத்தனையும் முழுமையாகப் பதிவு செய்து முறையாக எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துவருகிறார். அர்ப்பணிப்பு மிக்க இந்த செயலுக்காக அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள் காணொளி இணைப்புகள் பால்யத்தை எழுதுதல் – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை https://www.youtube.com/watch?v=vAmXhnsDd_E உயிர்மை வழங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழாவில் முனைவர் சா. பாலுச்சாமி உரை https://www.youtube.com/watch?v=ZtI8sXe_kE4 உயிர்மை வழங்கும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘குற்றத்தின் கண்கள்’ நூல் …
இம்மாத அந்திமழை இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் என்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவருக்கு என் அன்பும் நன்றியும் ** எஸ்.ரா: அன்பும் நட்பும் மதிப்பும் மனுஷ்ய புத்திரன் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயர் அவர் எழுத வந்த சிறிதுகாலத்திலேயே நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்த அடையாளமாக மாறிவிட்டது. 90 களில் வெளிவந்த சுமங்களா இதழ் ஒன்றில் எதிர்கால நவீன இலக்கியத்தின் முகமாக இருக்கப்போகும் ஐவரில் ஒருவராக எஸ்ராவும் இனம்காணப்பட்டிருந்தார். அது உண்மை என்பதை எஸ்ராவும் அவரது காலமும் …
புத்தாண்டு இரவை டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன் கொண்டாடினேன். நிறைய வாசகர்கள், நண்பர்கள் வந்திருந்தார்கள். சரியாக 12 :05க்கு எனது சிறார் நாவலான ஏழு தலை நகரத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது. நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட நண்பரும் இயக்குனருமான பாரதி கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார். சிறப்பு பிரதியை நண்பர் பால நந்தகுமார் பெற்றுக் கொண்டார். புத்தாண்டு துவங்கியதும் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் இதுவே என பாரதி கிருஷ்ணகுமார் மகிழ்ச்சியோடு பாராட்டினார். வாசகர் எழுத்தாளர் …
நேற்று எனது நான்கு புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். புத்தாண்டின் முதல்நாளில் இவ்வளவு பேர் திரண்டு வந்து நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. மிகச்சிறப்பாக நூல்களை அச்சிட்டு கொண்டுவந்துள்ள உயிர்மை பதிப்பகத்திற்கும், நண்பர் மனுஷ்யபுத்திரன், அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், வேலூர் லிங்கன், ஒவியர் அமுதோன் ஆகியோருக்கு அன்பும் நன்றியும் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும், வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தீராத நன்றிகள் ••
இந்த ஆண்டில் நிறைய வாசிப்பதற்கு நேரம் கிடைத்தது. இலக்கியம், வரலாறு, சினிமா, தத்துவம், பண்பாட்டு ஆய்வுகள் எனப் பல்வேறு தளங்களில் வாசிக்ககூடியவன் என்பதால் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் மிக முக்கியமாகக் கருதும் சில புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். A DISTANT MIRROR: THE CALAMITOUS 14TH CENTURY – BARBARA W. TUCHMAN AN NA AKHMATOVA – THE WORD THAT CAUSES DEATH’S DEFEAT ATTORNEY AT LAW -M. …
என் மகன் ஹரிபிரசாத் அண்ணா பல்கலைகழகத்தில் மீடியா சயின்ஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறான். எடிட்டிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவன், என்.எப்.டி.சி நடத்திய படத்தொகுப்பிற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறான். தற்போது ஹரி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளான். அவனும் நண்பர்களும் இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இக்குறும்படத்தின் வெளியீட்டு விழா ஜனவரி 3 செவ்வாய்கிழமை மா லை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் முருகதாஸ், இயக்குனர் வசந்தபாலன், திரு சமஸ் ஆகியோர் கலந்து …
ஜனவரி 1 ஞாயிறு 2017 மாலை கவிக்கோ அரங்கில் வெளியிடப்படவுள்ள எனது புதிய புத்தகங்கள் உயிர்மை பதிப்பகம் இந்நூல்களை வெளியிடுகிறது. நாவல் சிறுகதைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கியக்கட்டுரைகள் உலக சினிமா கட்டுரைகள்