பிரபஞ்சன் விழா
எழுத்துலகில் பிரபஞ்சன் 55 விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறையப் பார்வையாளர்கள். வெளியூரிலிருந்து நிறைய வாசகர்கள் வந்து குவிந்த காரணத்தால் இருக்கைகள் இல்லாமல் அரங்கில் பலரும் நிற்கும் நிலை ஏற்பட்டது காலை பத்துமணிக்கு புதுவை இளவேனில் எடுத்த பிரபஞ்சன் புகைப்படங்களின் கண்காட்சியை இயக்குனர் கே.வி. ஆனந்த் துவக்கி வைத்தார். இளவேனிலின் கவித்துவமான புகைப்படங்களை வியந்து பாராட்டினார் கே.வி. ஆனந்த். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு பிரபஞ்சனுக்குச் சால்வை அணிவித்துக் கௌரவித்தார். காலை முதல்அமர்வில் …