admin

இடக்கை புதிய பதிப்பு

இடக்கை நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெகுசிறப்பாக  வெளியிட்டுள்ளது. இந்நாவல் குறித்து இதுவரை பதினாறு விரிவான விமர்சனக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்நாவலின் ஹிந்தி மொழியாக்கம் தற்போது நடைபெற்றுவருகிறது.

உயிர்மை

புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தில் எனது நூல்கள் கிடைக்கின்றன பதின் புதிய நாவல் சைக்கிள் கமலத்தின் தங்கை  / புதிய சிறுகதைத்தொகுப்பு இடக்கை நாவலின் புதிய பதிப்பு

காணொளி

shruti.tv யை நடத்தி வரும் நண்பர் கபிலன் எனது இலக்கியநிகழ்ச்சிகள் அத்தனையும் முழுமையாகப் பதிவு செய்து முறையாக எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றம்  செய்துவருகிறார். அர்ப்பணிப்பு மிக்க இந்த செயலுக்காக அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள் காணொளி இணைப்புகள் பால்யத்தை எழுதுதல் – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை https://www.youtube.com/watch?v=vAmXhnsDd_E உயிர்மை வழங்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழாவில் முனைவர் சா. பாலுச்சாமி உரை https://www.youtube.com/watch?v=ZtI8sXe_kE4 உயிர்மை வழங்கும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘குற்றத்தின் கண்கள்’ நூல் …

காணொளி Read More »

அந்திமழை இதழில்

இம்மாத அந்திமழை இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் என்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவருக்கு என் அன்பும் நன்றியும் ** எஸ்.ரா: அன்பும் நட்பும் மதிப்பும் மனுஷ்ய புத்திரன் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயர் அவர் எழுத வந்த சிறிதுகாலத்திலேயே நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்த  அடையாளமாக மாறிவிட்டது. 90 களில் வெளிவந்த சுமங்களா இதழ் ஒன்றில் எதிர்கால நவீன இலக்கியத்தின் முகமாக இருக்கப்போகும் ஐவரில் ஒருவராக எஸ்ராவும் இனம்காணப்பட்டிருந்தார். அது உண்மை என்பதை எஸ்ராவும் அவரது காலமும் …

அந்திமழை இதழில் Read More »

புத்தாண்டு இரவு

புத்தாண்டு இரவை டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன்  கொண்டாடினேன்.  நிறைய வாசகர்கள், நண்பர்கள் வந்திருந்தார்கள். சரியாக 12 :05க்கு எனது சிறார் நாவலான ஏழு தலை நகரத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது. நான் பெரிதும் நேசிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட  நண்பரும் இயக்குனருமான பாரதி  கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார். சிறப்பு பிரதியை நண்பர் பால நந்தகுமார் பெற்றுக் கொண்டார். புத்தாண்டு துவங்கியதும் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் இதுவே என பாரதி கிருஷ்ணகுமார் மகிழ்ச்சியோடு பாராட்டினார். வாசகர் எழுத்தாளர் …

புத்தாண்டு இரவு Read More »