மதுரையில்
இடக்கை நாவலுக்கான விமர்சன அரங்கினைக் கடவு இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது மதுரையில் ஆகஸ்ட் 13 மாலை நார்த்கேட் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
இடக்கை நாவலுக்கான விமர்சன அரங்கினைக் கடவு இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது மதுரையில் ஆகஸ்ட் 13 மாலை நார்த்கேட் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
ஈரோடு புத்தக கண்காட்சியில் ஆகஸ்ட் 9 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்
கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய சிறுகதை. கவனம் சிற்றிதழில் வெளியானது. ••• புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர்நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்தில் சென்றுகொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க்கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறிவிட்டார்கள். நிலைக் கண்ணாடிக்கு முன் வேலை முடிந்து வெறுமனே அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்கள். ஆண்கள் கணுக்கால் சட்டையைப் போர்த்து இடுப்பில் இறுக்கிக்கொண்டுவிட்டார்கள். இன்னும் மூன்று நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டதா …
அம்மாவின் பொய்கள் பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறை தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய் எத்தனைப் பொய்கள் முன்பு என்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய் தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா? எனக்கினி பொய்கள் தேவை இல்லையென் றெண்ணினாயா? அல்லது வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் …
நவீன தமிழ் கவிதையுலகின் பெருங்கவி ஞானக்கூத்தன் இன்று மறைந்தார். சங்க கவிதைமரபின் தொடர்ச்சியிலிருந்து புதிய நவீன கவிதையை உருவாக்கிச் சாதனை செய்த மகத்தான கவிஞர் ஞானக்கூத்தன். அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பாகும் . ஞானக்கூத்தனின் மறைவிற்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழைய கணையாழி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது எனது முதல் புத்தகமான வெளியில் ஒருவனுக்கு வெளியான விமர்சனம் கண்ணில்பட்டது. என்னை உருவாக்கியதில் கணையாழிக்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது. தி.ஜா குறுநாவல் போட்டியில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அசோகமித்ரன் கையெழுத்தில் வந்த தபால் அட்டைகள் என்னிடமிருக்கின்றன.
பத்தே நிமிடங்கள் நிகழ்த்தப்படும் குறு நாடகங்களை ஊக்கபடுத்துவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது ஷார்ட் பிளஸ் ஸ்வீட் அமைப்பு.சிறந்த நாடகங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்கி உலக அளவில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். இவர்களின் நாடகவிழா சென்னை அல்லையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் கலந்து கொள்கின்றன. ஜூலை 6 லிருந்து – 23 வரை இந்நாடக விழா நடைபெறுகிறது. 27,29.30,31 தேதிகளில் இதன் இறுதிச் சுற்று நடைபெறுகிறது இந்த …
நாளை ( 17. 07.2016 ) சேலத்தில் பாலம் புத்தகக் கடை நடத்தும் வாசகர் சந்திப்பு நிகழ்வில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெறுகிறது இடக்கை நாவல் குறித்து ஜி. செல்வா உரையாற்றுகிறார். இடம் : பாலம் புத்தகக்கடை 35, அத்வைத ஆசிரம சாலை (புதிய பேருந்து நிலையல் எதிரில்) சேலம்- 4 நேரம் : காலை 11 மணி ••
இன்று மாலை கும்பகோணத்தில் எனது இடக்கை நாவல் குறித்து நண்பரும் வழக்கறிஞருமான மணிசெந்தில் உரையாற்றுகிறார். பொன்னி இலக்கியச்சுற்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது இடம் : புனித பீட்டர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பழைய பாலக்கரை, கும்பகோணம். நேரம் : மாலை 5 மணி ••