admin

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள வண்ணதாசன் என்ற கல்யாணி அண்ணனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள் சிறுகதைகளுக்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. எத்தனையோ அபூர்வமான கதைகளை எழுதிய வண்ணதாசனுக்கு இவ்விருது தாமதமாகவே கிடைத்துள்ளது. மார்கழி சந்தோஷத்தை தரும் மாதம். இந்த மார்கழியை அண்ணனின் விருது மேலும் அழகாக்கியுள்ளது.

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய கவிதைகளை மூன்று தொகுதிகளாக வெளியிடுகிறார். சமகாலப்பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் அவரது கவிதைகள் நம் காலத்தின் குரலாக ஒலிக்கின்றன. இந்தக் கவிதை தொகுதிகளின் வெளியீட்டுவிழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகிறேன் உயிர்மை பதிப்பகம் இந்நிகழ்வை நடத்துகிறது டிசம்பர் 25  மாலை 5 : 30 இடம்: கவிக்கோ மன்றம் , ஆழ்வார்பேட்டை. சென்னை

யாவரும்

யாவரும் பதிப்பகம் சார்பில் நடைபெறவுள்ள நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இடம்:  இக்சா மையம், எக்மோர். சென்னை நாள் 23 .12.2016 .   மாலை 6 : 30

பதின் போஸ்டர்

எனது புதிய நாவல் பதின் ஜனவரி 1 2017  அன்று வெளியாகவுள்ளது. இதற்கு வாசகர்கள் பல்வேறு போஸ்டர்களைத் தயாரித்து அனுப்பி வருகிறார்கள் மகி என்ற வாசகர் அனுப்பிய போஸ்டர்

மாயவெளிச்சம்

இன்று காலை William Trost Richards என்ற அமெரிக்க ஒவியர் வரைந்த Moonlight On Mount Lafayette என்ற வாட்டர் கலர் ஒவியத்தை இணையத்தில் கண்டேன். நிலவொளியை எவ்வளவோ ஒவியர்கள் வரைந்திருக்கிறார்கள். ரிச்சர்ட்ஸ் வரைந்துள்ள மாயவெளிச்சம் பிரமிப்பூட்டுகிறது. இரவின் தனிமையை இதை விடச் சிறப்பாக வரைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. கலைந்த மேகங்களுக்குள் ஒளிர்கிறது நிலா. பேரமைதி ததும்பும் நிலவெளி. வடஇந்திய ரயில் பயணம் ஒன்றில் இது போன்ற ஒரு காட்சியை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். நிமிஷ நேர …

மாயவெளிச்சம் Read More »

கசந்த உறவு

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த Norman Thomas di Giovanni தனது அனுபவங்களையும் போர்ஹேயின் திருமண வாழ்வு குறித்தும் Georgie & Elsa என்ற சுவையான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த அளவு யாரும் போர்ஹேயின் மறுபக்கத்தை எழுத்தில் அடையாளம் காட்டியதில்லை.  மிரட்சியோடு வியந்துபார்க்க வைக்கும் எழுத்துகளைப் படைத்த போர்ஹேயும் சாமானியரின் ஆசைகளுடன் விருப்பு வெறுப்புகளுடன், ஏமாற்றங்கள். குடும்பச் சண்டைகளுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதை நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார் ஜியோவனி. தான் கல்லூரி நாட்களில் காதலித்த …

கசந்த உறவு Read More »

வாழ்த்துகள் சுகுமாரன்

இந்த ஆண்டிற்கான இயல்விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.  நவீன தமிழ் கவிதையுலகின்  மகத்தான கவிக்கு இந்த விருது வழங்கப்படுவது சந்தோஷம் அளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் இயல் அமைப்பிற்கும் எழுத்தாளர்  அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் ••

ஏழுதலை நகரம்

சிறார்களுக்காக நான் எழுதிய ஏழுதலைநகரம் நாவல்புதிய பதிப்பாக வெளிவரவுள்ளது டிஸ்கவரி புக்பேலஸ் இதனை வெளியிடுகிறது

நிலவழி

நவீன இந்திய இலக்கியம் குறித்த எனது புதிய கட்டுரைத் தொகுப்பு நிலவழி உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. இந்நூல் ஜனவரி 1  சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது

குற்றத்தின் கண்கள்

உலக சினிமா குறித்த எனது புதிய கட்டுரைத் தொகுப்பு குற்றத்தின் கண்கள் உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. இந்நூல் ஜனவரி 1  சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது