admin

புதிய சிறுகதைத்தொகுப்பு

எனது புதிய சிறுகதைத்தொகுப்பு சைக்கிள் கமலத்தின் தங்கை உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. இருபது கதைகள் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு ஜனவரி 1 2017  சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

மனுஷ்ய புத்திரன் எழுதிய 460 கவிதைகள் மூன்று பெரும் தொகுதிகளாக வரும் டிசம்பர் 25 வெளிவர இருக்கின்றன. அதற்கான முன்வெளியிட்டு திட்டம் அறிவிக்கபட்டுள்ளது 1. இருளில் நகரும் யானை 2. காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் 3. தித்திக்காதே………. மொத்தம் 460 கவிதைகள்/ 800 பக்கங்கள்/ கெட்டி அட்டைப் பதிப்பு  ரூ 900. சிறப்பு விலை ரூ 600 …………………… முன்பதிவு செய்ய பணம் செலுத்தும் முறைகள் ……………………… 1. உயிர்மை இணையதளத்திற்கு கீழ்கண்ட சுட்டியில் சென்று …

மனுஷ்யபுத்திரன் கவிதைகள் Read More »

ஹரியின் குறும்படம்

என் மகன் ஹரிபிரசாத் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளான். அண்ணா பல்கலைகழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா நான்காம் ஆண்டு பயிலும் அவனும் நண்பர்களும் இணைந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் வெளியீட்டுவிழா விரைவில் நடைபெறவுள்ளது. https://www.facebook.com/Light-Angle-Production-1252450254829358/?hc_ref=NEWSFEED

பதின்

எனது புதிய நாவல் பதின் – ஜனவரி 1 – 2017 மாலை வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்நாவலை வெளியிடுகிறது விழா நடைபெறுமிடம் : கவிக்கோ மன்றம் மாலை 6 மணி ••

தஞ்சையில்

நாளை (23 .11.2016 ) தஞ்சை பல்கலைகழகத்தில்  சாகித்ய அகாதமி நடத்தும் தமிழ் இலக்கியத் திறனாய்வு, கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் : மரபும் புதுமையும் கருத்தரங்கில் கலந்து கொண்டு மையக்கருத்துரையாற்றுகிறேன் நிகழ்வு நடைபெறுமிடம் :பேரவைக்கூடம் தமிழ்ப்பல்கலைகழகம் நேரம் : காலை 10 மணி இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வை தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்தின் இலக்கியத்துறை இணைந்து நடத்துகிறது.

தஸ்தாயெவ்ஸ்கி எனும் தந்தை

தஸ்தாயெவ்ஸ்கியின் இரண்டாவது மகள் லூபோவ் (Lyubov Dostoyevskaya )தனது தந்தை குறித்த நினைவுகளை FYODOR DOSTOYEVSKY- A STUDY என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு 1921ல் இந்நூல் வெளியாகியிருக்கிறது. தந்தையைப் போலவே நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்பட்ட லூபோவ் சிகிட்சைக்காக இத்தாலி சென்றார். அங்கேயே தங்கி வாழத் துவங்கி தனது 56வது வயதில் அடையாளமற்ற பெண்ணாக இறந்து போனார். லூபோவ் இந்நூலை AiMEE DOSTOYEVSKY என்ற பெயரில் பிரெஞ்சில் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய The Emigrant …

தஸ்தாயெவ்ஸ்கி எனும் தந்தை Read More »

தமிழ் இலக்கியப்பேரகராதி

வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப்பேரகராதி  ஐந்து தொகுதிகளை வாங்கினேன். வரலாற்று முறை அகராதி  என்பது ஒரு சொல் தமிழ் இலக்கியத்தில் எந்தெந்த இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.  என்ன பொருளைச் சுட்டுகிறது . அச்சொல்லை உரையாசிரியர்கள் எப்படி விளக்குகிறார்கள். சொல் அடைந்துள்ள மாற்றங்கள் எவை என விளக்கும் அகராதியாகும்.    இந்த இலக்கியப் பேரகராதியில் 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.  தமிழ் பேரறிஞர்களின் நாற்பது ஆண்டு கால கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த அகராதி தற்போது 50% தள்ளுபடி விலையில் …

தமிழ் இலக்கியப்பேரகராதி Read More »