admin

எழுதித் தீராப் பக்கங்கள்

காலம் இலக்கிய இதழின் ஆசிரியர் கனடா செல்வம். தமிழ் இலக்கிய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் நல்ல நண்பர். கனடாவிற்கு நான் சென்றிருந்த போது செல்வம் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். சிறப்பாக உபசரிப்புச் செய்தார். இலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்வது,. கூட்டங்கள் நடத்துவது, சிற்றிதழ் கொண்டு வருவது , புத்தகக் கண்காட்சி நடத்துவது, ஈழ அரசியல் சார்ந்த கூட்டங்களை ஒருங்கிணைப்புச் செய்வது, நவீன நாடகங்கள் நடத்த உதவி செய்வது,  கூத்து, நாட்டுப்புற …

எழுதித் தீராப் பக்கங்கள் Read More »

மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள்

பௌத்தம் தொடர்பான திரைப்படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் NFDC தயாரித்த Trishagni என்ற ஹிந்திப்படம் கிடைத்தது. நேற்றிரவு அதைப் பார்த்தேன். 1988ல் வெளியான இப்படத்தை நடிகரும் எழுத்தாளருமான Nabendu Ghosh இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்றுள்ளது இப்படம் வங்காள எழுத்தாளர் Sharadindu Bandyopadhyayவின் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. Trishagni என்பதற்கு மணற்புயல் என்று அர்த்தம். கிமு 200ல் பாலைவன பிரதேசத்திலுள்ள சாரிபுத் என்ற நகரில் இக்கதை நடக்கிறது. அங்கு புகழ்பெற்ற பௌத்த …

மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள் Read More »

புதிய புத்தகங்கள்

மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது நான்கு புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது அமெரிக்கா, மற்றும் ஜப்பானிய பயண அனுபவத்தைப்  பற்றிய நூல் நிலம் கேட்டது கடல் சொன்னது. சிறார்களுக்கான சிறுநாவல் வரிசையில் மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. 1.நிலம் கேட்டது கடல் சொன்னது ரூ.70 2. பூனையின் மனைவி ரூ.35 3. உலகின் மிகச்சிறிய தவளை ரூ.40 4. இறக்கை விரிக்கும் மரம் ரூ.40 185 ரூபாய் மதிப்புள்ள இந்த நான்கு …

புதிய புத்தகங்கள் Read More »

மூன்று நண்பர்கள்

புகழ்பெற்ற ஸ்பானிய திரைப்பட இயக்குனர் Carlos Saura. இவரது இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான BUÑUEL AND KING SOLOMON’S TABLE என்ற படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன். இப்படம் பிரபல இயக்குனர் லூயி புனுவலைப்(Luis Buñuel) பற்றியது. குறிப்பாக ஒவியர் டாலி, கவிஞர் லோர்க்காவோடு அவருக்கிருந்த நட்பைப்பற்றியது. மூவரும் நெருக்கமான நண்பர்களாகப் பழகினார்கள், சில ஆண்டுகள் மேட்ரிட்டில் ஒரே அறையில் ஒன்றாக வசித்தார்கள். புனுவலின் வாரிசு எனக் கொண்டாடப்படும் கார்லோஸ் சுரா இப்படத்தை ஒரு …

மூன்று நண்பர்கள் Read More »

ஒளியை நேசித்தவன்

என் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கேமிராமேனுமான ஜீவா இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை ஒன்றினை குமுதம் லைப்  ( 31. 08. 2016 ) இணைப்பில் எழுதியிருக்கிறேன்

ருஷ்ய மொழியில்

நான் எழுதிய செகாவ் வாழ்கிறார் என ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்று நூல் ருஷ்ய மொழியில் வெளியாக இருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட ஒரு ரஷ்ய எழுத்தாளரைப் பற்றிய நூல் ருஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. ஆன்டன் செகாவை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது. இதனை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ 150.

முடிவற்ற விசாரணை

ஒரு சிறிய அறை. நான்கே முக்கியக் கதாபாத்திரங்கள். யூத சமயசட்டப்படி விசாரணை செய்யும் மூன்று நீதிபதிகள். இவர்களுக்குள் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து 115 நிமிஷங்கள் பரபரப்பாகச் செல்லும் திரைக்கதை. Gett: The Trial of Viviane Amsalem என்ற 2014ல் வெளியான இஸ்ரேல் பிரெஞ்சு கூட்டுதயாரிப்பில் உருவான படத்தைப் பார்த்து முடிக்கும் போது அதிர்ந்து போய்விடுகிறோம். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் ஒரு யூதப்பெண் படும் பாடு தான் படத்தின் மையக்கதை. யூதச்சட்டப்படி ஒரு பெண் விவகாரத்து பெற …

முடிவற்ற விசாரணை Read More »

விழா

தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இயல் இலக்கியச் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இந்நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன். பிரசன்னா ராமசாமி, விமலாதித்த மாமல்லன், சரவணன் சந்திரன், பேராசிரியர் பஞ்சாங்கம், புதுவை சீனுதமிழ்மணி, பேராசியர் வெங்கடசுப்பராய நாயகர், பாஸ்கர் சக்தி, வேடியப்பன், பிருந்தாசாரதி, ஆடிட்டர் சந்திரசேகர், கி.ராவின் மகன் பிரபி, அவரது மனைவி நாச்சியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள் இயல் சிறப்பு விருதிற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் …

விழா Read More »

இடக்கை – நீதிமுறையின் அரசியல்

-மணி செந்தில் தமிழ் மொழியின் நாவல் வரலாறு மிக நீண்ட பாரம்பரிய பெருமைகள் கொண்டது. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ஆம் ஆண்டு வெளியானது. அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவரிலிருந்து தொடங்கி இன்னும் செழுமையாக நீண்டு கொண்டிருக்கும் எண்ணற்ற எழுத்தாளர்கள் தமிழ் மொழியின் நவீன நாவல் வகைமையை தரம் குறையாமல் தங்கள் எழுத்துக்களால் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வகையில் சமகால எழுத்தாளர்களில் மிக முக்கிய எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணன் விளங்குகிறார். …

இடக்கை – நீதிமுறையின் அரசியல் Read More »

கவிதை எனும் வட்டக்கண்ணாடி.

There are three idealists: God, mothers and poets! They don’t seek the ideal in completed things— they find it in the incomplete. என்ற பீட்டர் ஆல்டென்பெர்க்கின் (Peter Altenberg) வரிகள் தான் அவரைத் தேடி வாசிக்க வைத்தது. ஆல்டென்பெர்க் ஆஸ்திரியாவின் முக்கியக் கவிஞர். வியன்னாவிலுள்ள கபே சென்ட்ரல் என்ற காபிஷாப் தான் இவரது உலகம். இவரது பெரும்பான்மைக் கவிதைகள் இந்தக் காபிஷாப்பில் வைத்து எழுதப்பட்டவை. இவரை “coffee house …

கவிதை எனும் வட்டக்கண்ணாடி. Read More »