நிகழ்ச்சிகள்
ஜனவரி 31 ஞாயிறு காலை பத்துமணிக்கு சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. •• பிப்ரவரி 1. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பெரம்பலூர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் •• பிப்ரவரி 3 . புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் பின்னலாடை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
அஞ்சலி
தலித் அரங்கியலை முன்னெடுத்த சிறந்த நாடக ஆளுமையும், பாடகரும், நாட்டார்கலைகள் பற்றிய ஆய்வாளருமான டாக்டர் கே.ஏ.குணசேகரன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனதுயரம் அடைந்தேன். தோழர் எஸ்.ஏ.பி. அவர்களால் மேடையேற்றப்பட்டு கலை இலக்கிய இரவுகள் தோறும் கே.ஏ.ஜி பாடிய நாட்களில் இருந்தே அவருடன் பழகியிருக்கிறேன். சிறந்த மனிதர். அற்புதமான பாடகர். பாண்டிச்சேரிக்குச் செல்லும் போதெல்லாம் கே.ஏ.ஜியைச் சந்தித்து உரையாடுவது வழக்கம், பலமுறை அவரது வீட்டில் உணவளித்திருக்கிறார். உலகதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய போது அங்கு நடந்த …
விருது
சென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாக “புர்ரா’ தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது இயக்குனர் மோகன்குமாருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரிக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சலுகை விலை
உயிர்மை வெளியிட்டுள்ள எனது ஆறு நாவல்கள் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் பொங்கல் புத்தக கண்காட்சியில் சலுகை விலையில் கிடைக்கின்றன. உயிர்மை அரங்கு எண் : 124, 125
பொங்கல் புத்தகத் திருவிழா
சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஜனவரி 13ல் துவங்குகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் ஜனவரி 16 மாலை 6 மணிக்கு வீடில்லாப்புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்
கர்ணன் முகவரி
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய எழுத்தாளனின் சித்திரம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கர்ணனைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பலரும் போனிலும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டார்கள்.அவரது முகவரி. திரு. கர்ணன் 37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு செல்லூர். மதுரை – 2 தொலைபேசி. 9487950844 •• விருப்பமானவர்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
இலக்கியவிழா
தி இந்து ஆங்கில நாளிதழ் நடத்தும் இலக்கியவிழாவில் ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்கிறேன். இந்த விழா ஜனவரி 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாக அரங்கில் நடைபெறுகிறது. The Hindu Lit For Life January 15 .THE HINDU PAVILION 12.05 pm – 12.55 pm Aham, Puram: Impact of urbanisation and industrialisation as reflected in Tamil …
வாசகசாலை
“வாசகசாலை”முகநூல் குழுமம், புத்தக வாசிப்பினை மேம்படுத்தும் விதமாக கடந்த ஒராண்டு காலமாக மாதம் ஒருமுறை ஒரு புத்தகம் பற்றிய கலந்துரையாடலையும், மூத்தபடைப்பாளிகளை கொண்டாடும் விதமாக ஆய்வரங்குகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. வாசகசாலை அமைப்பின் முதலாமாண்டு நிறைவு ஜனவரி, 9 ம்தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு 2015-ல் வெளியான படைப்புகளில் சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து விருது தர இருக்கிறார்கள். இதற்கான …
எனது குறும்படம்
சென்னை சர்வதேச பட விழாவில் நாளை (08/01/2016 ) மாலை ஆறரை மணிக்கு எனது சிறுகதையை மையமாகக் கொண்டு எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் உருவாக்கிய புர்ரா குறும்படத்தை திரையிடுகிறார்கள். ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்தத் திரையீடு நடைபெறுகிறது.