நிவாரணப்பணிகள்
கடந்த ஒரு வார காலமாக ஊரிலிருந்தபடியே எனது வாசகர்கள், நண்பர்கள் எனப் பலரையும் ஒன்றிணைத்து கடலூர் மற்றும் சென்னை வெள்ளநிவாரணப்பணிகளுக்கான உதவிகளை மேற்கொண்டேன். நேற்று சென்னை திரும்பினேன். மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி. திருநெல்வேலி என என்னோடு தொடர்புடைய பல நண்பர்கள், வாசகர்கள் தங்களால் முடிந்த உதவிப்பொருட்களைச் சேகரித்து வேன்களில் அனுப்பி வைத்தார்கள். இது போலவே சென்னையிலுள்ள சில தன்னார்வக் குழுக்களுக்குத் தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்களை அணுகிப் பெற்றும் தந்தேன் எனது அண்ணன் டாக்டர் எஸ். வெங்கடாசலம் …