முகாம் நினைவுகள்
திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறார் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்மழையின் காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாதோ எனத் தோணியது, ஆனால் சனி காலை முதல் ஞாயிறு மாலை வரை மழையில்லை. முந்திய நாள் பெய்த மழையின் குளிர்ச்சியில் திருவண்ணாமலை குளிர்ந்து ஊட்டி போலாகியிருந்தது. காணுமிடமெல்லாம் தண்ணீர், குளிர்ச்சி, கோடையில் இவ்வளவு மழை என்பது அதிர்ஷடமே. வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து கிளம்பும் போதே நல்ல மழை. சாலை தெரியவில்லை. காரில் திருவண்ணாமலைக்குப் போய்ச் சேர ஐந்து மணி …