அழைப்பிதழ்
முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் பணம் அனுப்ப வேண்டிய விபரம் KVB BANK . SB ACCOUNT AC NAME : M. VEDIYAPPAN AC NO: 1155155000088544 KODAMBAKKAM BRANCH. CHENNAI 24 IFSC : KVBL 0001155
முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் பணம் அனுப்ப வேண்டிய விபரம் KVB BANK . SB ACCOUNT AC NAME : M. VEDIYAPPAN AC NO: 1155155000088544 KODAMBAKKAM BRANCH. CHENNAI 24 IFSC : KVBL 0001155
எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கான பதாகை ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது இணைய இதழ்களில் பதாகை குறிப்பிடத்தக்க ஒன்று. சிறந்த கவிதைகள், மொழியாக்கங்கள், கதைகளை வெளியிடுகிறார்கள். இதில் உள்ள நாஞ்சிலின் பேட்டி மிகச்சிறப்பாக வந்துள்ளது. அவரது பன்முகப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவடன் இயல்பான செறிவான கருத்துகளைக் கொண்டிருக்கிறது. இது போலவே நாஞ்சிலோடு பழகிய அனுபவம் குறித்த அம்பை மற்றும் அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் சிறப்பாக உள்ளன. சுரேஷ் கண்ணனின் கட்டுரையும், சிவானந்தம் நீலகண்டன் கட்டுரையும் எனக்குப் பிடித்திருந்தன. தமிழ் இலக்கியத்தின் மிகமுக்கியப் படைப்பாளியான …
டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து மே 16 மற்றும் 17 தேதிகளில் சிறார் இலக்கிய முகாமினை திருவண்ணாமலையில் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். இந்த முகாமில் சிறுவர்களுக்கான 12 முக்கிய நூல்கள் விவாதிக்கபட உள்ளன. 1. மாகடிகாரம் – விழியன் – புக்ஸ் பார் சில்ரன் 2. வாத்துராஜா –விஷ்ணுபுரம் சரவணன்- பாரதி புத்தகாலயம் 3. சிரிக்கும் வகுப்பறை – எஸ்.ராமகிருஷ்ணன்– வம்சி பதிப்பகம் 4. பச்சைநிழல் –உதயசங்கர் – என்.சி.பி.ஹெச். வெளியீடு 5. ஜிமாவின் …
தற்காப்புக்காக – ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (Fernando Sorrentino) தமிழில்:எம்.எஸ். ஒரு சனிக்கிழமை காலை, சுமார் பத்து மணி இருக்கும். எனது மூத்த பையன் – விஷமக் குரங்கு – அடுத்த வீட்டுக்காரரின் வாசல் கதவில் ஒரு சிறு இரும்புக் கம்பியால் பூவேலை மாதிரி எதையோ கீறிவிட்டான். இதனால் பெரிய விபரீதம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை. ஒரு சிறிய கீறல்தான். சற்றுக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால்தான் கண்ணுக்குத் தெரியும். எனக்குச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது : முதலில் இதை …
இதய ஒலி – எட்கர் ஆலன் போ – சிறுகதை தமிழில்: இலக்கியன் உண்மை, நான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன் என்னை பைத்தியக்காரன் என நீங்கள் நினைப்பது தவறு வினோதமான ஒரு நோயால் நான் பீடிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நோய் எனக்கு நல்லதுதான் செய்து இருக்கிறது. திடீரென காய்ச்சல் வந்தால் , நம் புலன்கள் பாதிக்கப்படும், மந்தமாகும். ஆனால் இந்த நோய் என் புலன்களை மேன்மைபடுத்தி இருக்கிறது. குறிப்பாக கேட்கும் சக்தி எனக்கு நம்ப முடியாத …
வெள்ளையானைகளைப் போன்ற மலைகள் எர்னெஸ்ட் ஹெமிங்வே தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி எப்ரோ சமவெளியில் மலைகள் நீளமாகவும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப் பக்கத்தில் நிழலோ மரங்களோ ஏதுமில்லை; ரயில்நிலையம் சூரிய வெளிச்சத்திலிருந்த இரண்டு ரயில்களுக்கு நடுவே இருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகே பக்கத்தில் கட்டிடத்தின் இளம் சூட்டுடன் கூடிய நிழலில் கதவைத் திறந்தால் ஒரு மதுபானக் கடையும் அதன் கதவில் பூச்சிகளை உள்ளே விடாதிருக்க மூங்கில் மணிகளால் ஆன திரையும் இருந்தன. அந்த அமெரிக்கனும் இளம் பெண்ணும் கட்டிடத்திற்கு …
நுரை மட்டும் போதும் – ஹெராந்தோ தெலஸ் –( Hernando Tellez – Just Lather, That’s All ) தமிழில் -இரா. செல்வராசு உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை …
நதியின் மூன்றாவது கரை – ஜோவோ கிமேரஸ் ரோஸா ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன். தமிழில்: ஆர்.சிவகுமார் ** கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை …
குரங்கின் பாதம் – W. W. Jacobs -சிறுகதை தமிழில் : என்.பக்கிரிசாமி ** நல்ல குளிரும், நசநசவென்று ஈரமும் மிகுந்த ஒரு குளிர்கால இரவு. ஜன்னல்களின் திரைப்பலகைகள் நன்கு மூடப்பட்டிருந்தது. அறையின் வெப்பத்தை அதிகப்படுத்த உண்டாக்கப்பட்ட நெருப்புத்தொட்டியில் கனழ்ந்துகொண்டிருந்த கரித்துண்டுகள் தங்களது வேலையை சரியாகச் செயததால், அறையின் கதகதப்பு குளிருக்கு அடக்கமாக இருந்தது. தந்தை வொய்ட்டும் மகன் ஹெர்பர்ட்டும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். வொய்ட் ஒரு வித்தியாசமான வகையில் குதிரையை நகர்த்தி மகனுடைய ராஜாவை கொல்வதற்கு முயற்சி …
டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் வருகிற மே 16 மற்றும் 17 தேதிகளில் குழந்தைகள் இலக்கியம் குறித்து இரண்டு நாள் முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதில் குழந்தை இலக்கிய நூல்கள், தமிழ் காமிக்ஸ், கதை சொல்லும் நிகழ்வு , உலகப்புகழ்பெற்ற குழந்தை இலக்கியப் படைப்புகள், எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம், குழந்தைகள் சினிமா ஆகிய அமர்வுகள் இடம் பெற உள்ளன. எழுத்தாளர்கள், கதை சொல்லிகள், ஒவியர்கள், குறும்பட இயக்குனர்கள் எனப் …