டிஸ்கவரி புக் பேலஸ்
டிஸ்கவரி புக் பேலஸ் நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகள். விலை ரூ 800 இதனை ஆன் லைனில் வாங்க https://discoverybookpalace.com/
டிஸ்கவரி புக் பேலஸ் நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகள். விலை ரூ 800 இதனை ஆன் லைனில் வாங்க https://discoverybookpalace.com/
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் சார்பில் வழங்கப்படும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாசனுக்கும், மொழிபெயர்ப்பு விருது பெற்றிருக்கும் ஆர். சிவகுமாருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் •• சிற்பி இலக்கிய விருது பெற்றுள்ள கவிஞர் ரவி சுப்ரமணியன் அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். ••
மதுரை புத்தகக் கண்காட்சிக்கு மறுபதிப்பு காணும் எனது நூல்கள். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகங்களை உயிர்மை அரங்கிலும், ஆன்லைன் மூலமும் பெறலாம் ••
வண்ணநிலவன் பாண்டிச்சேரி ரோமன்ரோலண்ட் நூலகம் நான் வேலை பார்த்து வந்த புதுவைக் குரல் அலுவலகத்தின் எதிரேதான் இருந்தது. ரோமன் ரோலண்ட் நூலகம் ஒரு புஸ்தகச் சுரங்கம். பேர்லாகர் க்விஸ்ட்டின் ‘அன்புவழி’ போன்ற மகத்தான உலக இலக்கியங்களை எல்லாம் அந்த நூலகத்திலிருந்து எடுத்துச் சென்று படித்தேன். காரை சிபி, சில பிரெஞ்சு நாவல்களின் ஆங்கிலமொழி பெயர்ப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பாண்டிச்சேரியில் இருந்த நாட்களில் உலக இலக்கியங்களில் திளைத்தேன். அவை என் இலக்கிய அறிவைப் பட்டை தீட்டின. இலக்கியக் …
உலக அரங்கில் தமிழர்களுக்குப் பெருமை தேடி தந்த சிறந்த அறிவியலாளரும், உயர்ந்த பண்பாளரும் ,முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாமுக்கு என் அஞ்சலிகள். டாக்டர் கலாம் இளைஞர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அளப்பரியது. கல்வி குறித்துத் தன் வாழ்நாள் முழுவதும் கலாம் பேசிக் கொண்டேயிருந்தார். அந்தக் கனவை நினைவேற்றுவது அனைவரின் கடமை, கலாம் அவர்கள் புவியிலிருந்து மறைந்தாலும் அவர் உருவாக்கிய கனவுகள் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். •••
ஹாட் ட்ரிக் எட்கர் கேரத் (இஸ்ரேல்) தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் ”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” ஆ, இதோ வருகிறது வெளியே. மாயாஜால நிகழ்ச்சியின் கடைசி வித்தை. தொப்பியில் இருந்து ஒரு முயலை வெளியே இழுக்கிறேன். எப்பவுமே நிகழ்ச்சி முடிகிற போது இதைச் செய்வேன், ஏனென்றால் குழந்தைகளுக்கு பிராணிகளைப் பிடிக்கும். குறைந்தபட்சம் நான் குழந்தையாய் இருந்தபோது பிராணிகளிடம் நான் பிரியம் வைத்திருந்தேன். நிகழ்ச்சி இந்த விதமாய் முடிந்தால் பளிச்னு இருக்கும், அப்படியே முயலை …
” இந்த உலகத்தில் எதையாவது மாற்றவேண்டும் என்றால் அது இசையால் மட்டுமே சாத்தியமாகும்.” – ஜிமி ஹென்ரிக்ஸ் காலத்தால் அழியாத தமிழ்திரைப்பாடல்களை அள்ளி வழங்கிய மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன் காலமானார். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஹாலிவுட்டின் மௌனப்பட யுகத்தில் சார்லி சாப்ளினுக்கு இணையாக இருந்த மகத்தான கலைஞன் பஸ்டர் கீட்டன்.(Buster Keaton) அவரது நகைச்சுவை உயர்தரமானது. தி ஜெனரல் என்ற கீட்டனின் படத்தை உலகின் மிகச்சிறந்த படமாகச் சொல்கிறார் ஆர்சன் வெல்ஸ் கீட்டனின் நகைச்சுவையை ரசிக்க : Winds of Change https://youtu.be/yjV9tobFjLQ
சிறுவர் விளையாட்டு – வில்லி ஸோரன்ஸன் (டேனிஷ்) தமிழில்: நகுலன் ஒரே தாய் தகப்பன்மாருக்குப் பிறந்த விசேஷத்தினால் சகோதரர்களான அவ்விரு சிறுவர்கள், அதே முறையில் பொதுவாக ஒரு மாமனையும் பெற்றிருந்தார்கள். சிறுவர்களுடைய மாமனுக்கு ஒரு காலை முறிக்கவேண்டிய அவசியமேற்பட்டது. இதனால் அவ்விரு சிறுவர்களும், தங்கள் மாமனைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். சிறுவர்களுடைய பரபரப்பைச் சாந்தப்படுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு இது விஷயமாக விஞ்ஞான ரீதியாக விஷயத்தை விளக்கிக்காட்ட வேண்டுமென்று நிச்சயித்தார்கள். அதற்காக அவர்கள் சிறுவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள். அவர்களுடைய …
எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் சக்திவேல் எனது கதை ஒன்றைக் குறும்படமாக இயக்கியுள்ளார். திங்கள் என்ற இக்குறும்படத்திற்கான கதை வசனத்தை நான் எழுதியிருக்கிறேன். இயக்குனர் அருண்மொழி முக்கியக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். https://youtu.be/R5ysOHh3WqI