கொண்டாட வேண்டிய நாடகம்
தியேட்டர் லேப் நாடக அமைப்பின் பத்தாண்டு விழாவில் நேற்று கதைகள் காத்திருக்கின்றன என்ற தமிழ் சிறுகதைகளின் நாடகவடிவைக் கண்டேன், அரங்கு நிரம்பிய கூட்டம், மழைக்குள்ளாகவே நாடகம் நடைபெற்றது, கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் நாடகம் பார்த்தார்கள் தமிழின் சிறந்த சிறுகதைகளை இன்றைய சூழலோடு பொருத்தி சிறப்பாக மேடையேற்றினார்கள். பங்குபெற்ற நடிகர்கள் அத்தனை பேரும் பயிற்சி மாணவர்கள், அவர்களின் தேர்ந்த நடிப்புமும் உற்சாகமான பங்கேற்பும் மிகுந்த சந்தோஷம் அளித்தது. இதனைச் சாத்தியமாக்கியவர் தியேட்டர் லேப்பின் இயக்குனர் ஜெயராவ், அவருக்கும் …