திருவண்ணாமலை
இன்று திருவண்ணாமலை செல்கிறேன் பவா மற்றும் நண்பர்களைச் சந்திப்பதுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் நாளையும் திருவண்ணாமலையில் இருப்பேன் ••
இன்று திருவண்ணாமலை செல்கிறேன் பவா மற்றும் நண்பர்களைச் சந்திப்பதுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் நாளையும் திருவண்ணாமலையில் இருப்பேன் ••
– லேகா உலக இலக்கியம், உலக சினிமா,பயண அனுபவங்கள் என எஸ்.ராவின் அனுபவ தேடல்கள் பலவற்றுள் இருந்து வேறுபட்டு குழந்தைகளுக்கான மிகுந்த கற்பனை,தந்திரங்கள்,மாயாஜாலங்கள் நிறைந்தது இந்நாவல். இரும்புக்கை மாயாவி” ,”வேதாள கதைகள்” ,”சிந்துபாத்” என சிறு பிராயத்தில் படித்த கதைகளை மீண்டும் நினைவில் கொண்டும் இந்நாவலின் கதையாடல் முற்றிலும் ஒரு புதிய அனுபவம். குழந்தைகளுக்கான வாசிப்பு வெளிகள் முற்றிலும் சுருங்கிய இன்றைய சூழலில் ஆனந்த விகடனின் இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது தற்கால நிகழ்வாகவே சொல்லப்படும் இந்நாவலின் கதையாடல் எங்கோ …
கேசவமணி *** வாழ்க்கையில் பிறர் நமக்குச் செய்யும் அவமானங்களும், துரோகங்களும் வலி நிரம்பியவைதான் என்றாலும், அவைகள் புறக்கணிப்பின் துக்கத்தைப் போல அவ்வளவு வலி நிறைந்ததல்ல. நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் புறக்கணிப்பின் துன்பத்திற்கு ஆளாகிறோம். ஆனாலும், ஒரு காது கேளாதவனின் புறக்கணிப்பின் துக்கத்தை நாம் ஒரு போதும் உணர முடியாது. அதை அந்த உலகத்தில் இருப்பவர்களால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தேவராஜ் எனும் காது கேளாத மனிதனின் துக்கத்தை, வலியை, வேதனையை எஸ்.ராமகிருஷ்ணன் உணர்வுப் …
தமிழ் இலக்கிய உலகின் மூத்த விமர்சகரும், சிறந்த பண்பாளருமான தி.க.சி காலமடைந்த செய்தி கேட்டு தாளமுடியாத துயரமடைந்தேன் இலக்கியத்திற்காகவே வாழ்ந்த அபூர்வமான மனிதர் தி.க.சி, புதிய எழுத்தாளர்களை அவர் போல வழிநடத்தக்கூடியவர் எவருமில்லை, அவரது பாராட்டுக் கடிதம் பெறாத எழுத்தாளர்கள் எவருமில்லை, பேரன்பு கொண்ட மனிதர். தி.க.சி ஒரு தனிநபரில்லை அவர் ஒரு இலக்கிய இயக்கம், அவர் உருவாக்கிய எழுத்தாளர்கள், தீவிர வாசகர்கள், ஊடக செய்தியாளர்கள் என நிறைய இருக்கிறார்கள், எனது முதல் கதை வெளியான போது …
சென்னை லலித் கலா அகாதமியில் நடைபெற்று வரும் Regional Art Exhibition 2014 பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த இளம் ஒவியர்களின் அரிய ஒவியங்கள், சிற்பங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருந்தன, இரண்டாயிரத்துக்குப் பிறகு இந்தியாவின் நவீன ஒவியஉலகில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிக அதிகமாகயிருப்பதைப் பலரது ஒவியங்களில் காணமுடிகிறது, நிறத்தேர்வு. காட்சிக்கோணம், உருவங்களைச் சிதறடிக்கும் விதம், லயம் போன்றவற்றில் தொழில்நுட்பத்தின் பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. அதே நேரம் மேற்குலகின் பாதிப்பிலிருந்து விலகி தங்களுக்கான தனித்தன்மையுடன் சில இளம் ஒவியர்கள் அசலாக …
கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வில் 175 பேர் கலந்து கொண்டார்கள், இதில் எழுபது சதவீதம் பேர் இளைஞர்கள், தீவிர வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள், பெங்களுர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கோவை என வேறுவேறு ஊர்களில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டார்கள் மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த முகாமிற்கு இயக்குனர் சசி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், பேராசிரியர் ராமகுருநாதன், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள் எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, அகநாழிகை வாசுதேவன், …
ஞாயிறு (23.03.2014) அன்று காலை 9.30 மணிக்குக் கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் துவங்க இருக்கிறது இதற்காகத் தண்டரை வரை பயணம் செய்வதற்கான வாகனவசதி டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பைக் அல்லது காரில் வர விரும்புகிறவர்கள் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை பிரதான சாலையில் வந்து செங்கல்பட்டு பாலத்தின் கீழ் உள்ள பாதை வழியாக ஊருக்குள் நுழைந்து திருக்கழுகுன்றம் சாலையில் பயணிக்க வேண்டும், செங்கல்பட்டில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் தண்டரை உள்ளது, …
2005-ம் ஆண்டில் குற்றாலத்தில் நான் நடத்திய இலக்கிய முகாமின் புகைப்படங்களை நண்பர் முரளிமனோகர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்செயலாக அதன் இணைப்பை நேற்று ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். புகைப்படங்களைக் காணும் போது பரவசமாக இருந்தது. குற்றாலச்சாரலில் நனைந்தபடியே இரண்டு நாட்களும் பகலிரவாகத் தொடர்ந்த உரையாடல்கள், வேடிக்கை கதைகள், தீவிர இலக்கிய விவாதங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன, அரிய தருணங்களைப் புகைப்படமாகச் சேகரித்து வைத்துள்ளதற்கு நன்றி முரளி. அந்த முகாமில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன், பூமணி, சோ,தர்மர், …
கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் கலந்து கொள்பவர்களுக்காக டிஸ்கவரி புக்பேலஸ் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. நான் தொகுத்துள்ள 100 சிறந்த கதைகள் புத்தகம் ரூ 650க்கு பதிலாக ரூ 550க்கு விற்பனை செய்யப்படும், 1100 பக்கங்கள் உள்ள இந்த தொகைநூல் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை உள்ளடக்கியது, புதிதாக எழுத விரும்புகிறவர்கள், இலக்கிய ரசனையை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது. இம்முகாமில் எனது ஏழு இலக்கியப் பேருரைகளின் டிவிடி, மற்றும் அனைத்துப் புத்தகங்களும் சிறப்புவிலையில் விற்பனைக்குக் …
இன்மை என்ற கவிதைக்கான இணைய இதழ் ஒன்றை கவிஞர் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார், மாதம் இருமுறை வலையேற்றம் செய்யப்படுகிறது, இந்த இணைய இதழில் சிறந்த கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள் வெளியாகின்றன, அவசியம் படித்துப்பாருங்கள் https://www.inmmai.com/p/blog-page.html •• இன்மை இதழில் வெளியான தீராத நினைவு என்ற வி.யோகேஷ் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, கச்சிதமான, எளிமையான கவிதை. தலைப்பு ஒன்று தான் பழமையானது, ஆனால் கவிதை தரும் அனுபவம் விரிந்து கொண்டே செல்கிறது. கடந்தகாலங்களை அப்படியே …