admin

சென்னை புத்தக சங்கமம்

சென்னை ராயப்பேட்டை YMCA வில்  நடைபெற்று வரும் சென்னை புத்தக சங்கமத்தில் நிறைய ஆங்கில நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக நவீன இலக்கியம் சார்ந்து வாசிக்க விரும்புகிறவர்களுக்கு உம்பர்தோ ஈகோ, நார்டின் கோடிமர், மார்க்ரெட் ஆட்வுட், டால்ஸ்டாய், டோனி மாரிசன், ஐசக் பேபல், தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், மிலன்குந்தேரா, மெல்வில், டொனால்ட் பார்த்தல்மே உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள்  மலிவு விலையில் கிடைக்கின்றன அத்துடன் ஒவியம், இசை, வரலாறு. அகராதிகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் …

சென்னை புத்தக சங்கமம் Read More »

சிறுமியின் பாராட்டு

குழந்தைகளுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நூலை ஜி.கீதா ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் Whirling Swirling Sky என்ற இந்த நூல்  நண்பர் பவா செல்லத்துரையின் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளளது, இரண்டு வாரங்களின் முன்பாக இந்த நூலைப் படித்த ஒன்பது வயது சிறுமி சாதனா எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தாள். வழக்கமான எத்தனையோ மின்னஞ்சல்களுக்கு நடுவில் அவளது மெயில் என்னை மிகவும் சந்தோஷம் கொள்ள வைத்தது, எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டாக இதைக் …

சிறுமியின் பாராட்டு Read More »

அஞ்சலி :மார்க்வெஸ்

லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்  இன்று காலமானார், மார்க்வெஸ் எனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர், அவரது கதைகளை எழுத்து எண்ணிப் படித்திருக்கிறேன் எண்பதுகளின் துவக்கத்தில் மார்க்வெஸின் புத்தகங்கள் கிடைக்காமல் அதை வாங்குவதற்காகவே சென்னை, திருவனந்தபுரம், மும்பை, எனச் சுற்றியலைந்திருக்கிறேன் கோணங்கி மார்க்வெஸின் படைப்புகளுக்காக கல்குதிரையில் சிறப்பிதழ் ஒன்று கொண்டுவந்திருக்கிறார், அந்தப் பணியில் அவர் கூடவே அலைந்த போது பகலும் இரவுமாக மார்க்வெஸ் பற்றிப் பேசியிருக்கிறோம், The Fragrance of …

அஞ்சலி :மார்க்வெஸ் Read More »

கார்வரின் கதையுலகம்

சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான மொழிபெயர்ப்புப் புத்தகம் ரேமண்ட் கார்வரின் வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு. கார்வரின் முக்கியமான 12 சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், இந்தக் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார் செங்கதிர். இவரோடு எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் ஆகியோரும் கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்கள், இதனைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது கார்வரை அறிமுகப்படுத்திச் செங்கதிர் நேர்த்தியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார்,  அதில் இன்றைய சூழலில் யதார்த்தவாத எழுத்து ஏன் தேவை என்பதைப் பற்றி விரிவாக …

கார்வரின் கதையுலகம் Read More »

மதுரைக்காட்சிகள்

தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த மதுரைக்காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன, கோட்டையுள்ள மதுரையைக் காண்பது வசீகரமாகயிருக்கிறது. 200 வருஷங்களில் காலம் எவ்வளவு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது டேனியலின் ஒவியத்தில் காணப்படும் மதுரை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது, செடி முளைத்துப் போய்ப் பராமரிக்கபடாத நாயக்கர் காலத்துக் கோட்டை, வேலைப்பாடு மிக்க நுழைவாயில், கிணற்றில் தண்ணீர் இறைப்பவர்கள், சாவகாசமாக உட்கார்ந்திருக்கும் இருவர், கோட்டை மதிலின் உறுதி, வாழை மரம். பொதிமாடு, நாட்டு ஒடு கொண்ட வீடு, வெளிறிய மேகம், ஒவியத்தில் பலரும் தலைப்பாகை …

மதுரைக்காட்சிகள் Read More »

பிறந்த நாள்

நாளை எனது பிறந்தநாளை முன்னிட்டு (13.04.2014) டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம். மாலை நான்கு மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்போம் தொடர்புக்கு : வேடியப்பன் 9940446650 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078. (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) நேரம்:  மாலை 4 மணி ••••

கும்பல்

ஜெயகாந்தன் ஒரு சொற்பொழிவில் இப்படிக் குறிப்பிடுகிறார், கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும். கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். …

கும்பல் Read More »

கோகோலின் பெயரால்

கோகோல் (Gogol) என்ற பெயரை வங்காளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசையாகப் பெயரிடுகிறார்கள் இரண்டு வங்கச் சிறுகதைகளைச் சமீபமாகப் படித்தேன், ஒன்று Samaresh Basu எழுதியது, மற்றொன்று Sirshendu Mukhopadhyay சிறுகதை, இரண்டிலும் அதன் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயர் கோகோல் இது போலவே ஜும்பா லஹரியின் The Namesake நாவலின் கதாநாயகன் பெயரும் கோகோல், நாவலில் கோகோல் ரஷ்யாவின் அடையாயச்சின்னம் போலவே சித்தரிக்கபடுகிறார். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, செகாவ், கார்க்கி போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் கவனிக்கபட்ட அளவிற்குத் தமிழ் சூழலில் …

கோகோலின் பெயரால் Read More »

களக்காடு

நிலக்காட்சிகளை வரைவதில் தேர்ச்சி பெற்ற தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஒவியர்கள் 1792ல் கன்னியாகுமரி பகுதியில் பயணம் செய்த போது களக்காடு கோவிலை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள் 222 வருஷங்களுக்கு முந்தைய தமிழகத்தின் அரிய ஒவியக்காட்சியது, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ளது களக்காடு. இங்குள்ள  சத்யவாகீஸ்வரர் கோவில் அழகிய ஒவியங்களும் இசைத் தூண்களும் சிற்பங்களும் கொண்டது,  கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. சுற்றிலும் பசுமையான வயல்களையும், …

களக்காடு Read More »

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என்ற வேதா இசையில் சுசிலா, டிஎம்எஸ் பாடிய நான்குகில்லாடிகள் படப் பாடலை காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன், திடீரென இப்படி ஏதாவது ஒரு பாடல் நினைவில் வந்துவிடும், அன்று முழுவதும் அந்தப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருப்பேன், வீட்டில் உள்ளவர்கள் அலுத்துப் போய் ,கேட்டது போதும் அணைத்துவிடுங்கள் என்று திட்டும் போதும் பாட்டை முழுமையாகக் கேட்ட திருப்தி வராது எதற்காக இப்படி ஒரே பாடலை மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என எனக்கே …

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் Read More »