admin

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்

– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.  சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர், அவரது ஊர்பெயரியல் ஆய்வு குறித்த அறிமுக கட்டுரை ••• மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக …

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள் Read More »

காந்தியும் சாப்ளினும்

வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது, இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க …

காந்தியும் சாப்ளினும் Read More »

எல்லீஸ் ஆர் டங்கன்

நேற்று சென்னை திரைப்பட விழாவில் An American in Madras, ஆவணப்படத்தினைப் பார்த்தேன், எல்லீஸ் ஆர் டங்கனை பற்றிய ஆவணப்படமிது. மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது, பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற கரண்பாலி இயக்கியுள்ளார் , ஆர் வி ரமணி படத்தின் ஒளிப்பதிவாளர், 80 நிமிசங்கள் ஒடக்கூடிய இப்படம் டங்கனை பற்றிய முழுமையாகச் சித்திரத்தை நமக்குத் தருகிறது, சதி லீலாவதி, பொன்முடி, அம்பிகாபதி, சகுந்தலா, மீரா, மந்திரிகுமாரி உள்ளிட்ட பதிமூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எல்லீஸ் ஆர் டங்கன்,  எம்ஜிஆரை தமிழ் சினிமா …

எல்லீஸ் ஆர் டங்கன் Read More »

விமர்சனக்குறிப்பு

வேல்முருகன் என்ற இளம்வாசகர் தனது முகநூலில் பதிந்துள்ள விமர்சனக்குறிப்பு ••• எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, தஸ்தாயெவ்ஸ்கியின், “ குற்றமும் தண்டனையும்” நூலை பற்றி, உலக இலக்கியப் பேருரைகள்.. என்ற தலைப்பில் பேசிய பேச்சு சில இணைப்பு கட்டுரைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. நேற்று மாலை விருதுநகரில் நலம் ஹோமியோ மருத்துவமனை சென்றேன் அங்கு நோயாளிகள் காத்து இருக்கும் நேரம் பயனுள்ளதாக இருக்கும் விதத்தில் நல்ல நூல்கள் படிக்க வைக்கபட்டு இருக்கும், அப்படி நான் காத்துயிருக்கும் நேரத்தில் படித்த நூல்தான் …

விமர்சனக்குறிப்பு Read More »

வெற்றிகரமான விழா

நேற்று திருச்சியில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பிய கூட்டம், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடம் கிடைக்காமல் நிகழ்ச்சி முழுவதும் நின்று கொண்டே கேட்டனர், வெளீயீட்டு விழாவிற்கெனக் கொண்டுவந்த புத்தகங்கள் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்து போனதோடு பலரும் பணம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வரிசையில் நின்றதும் நடந்தேறியது இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான பார்வையாளர்களை என் வாழ்வில் நான் கண்டதேயில்லை, புத்தகங்களை வெளியீட்டு பேசிய தேவதச்சன் அருமையான துவக்கத்தை ஏற்படுத்தினார், அறிமுகவுரையை …

வெற்றிகரமான விழா Read More »

இலக்கற்ற பயணி

இலக்கற்ற பயணி, எனது பயணக்கட்டுரைகளின் தொகுப்பு, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, பிராங்பெர்ட், பாங்காக், என சுற்றியலைந்த பல்வேறு அனுபவங்களின் பதிவு, முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 8 அன்று வெளியாகிறது •••

பவா கதை சொல்கிறார்

பவா செல்லத்துரை என்றொரு கதைசொல்லி ஆவணப்படத்தைப் பார்த்தேன் ,பவாவோடு இருபது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் படம் பார்க்கும் போது, அவர் கூடவே இருந்து கதை கேட்பது போல இயல்பாக, நேர்த்தியாக, உணர்ச்சிபூர்வமாக இப்படம் உருவாக்கபட்டுள்ளது, சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர், கதை சொல்லி, இலக்கிய இரவுகளை உருவாக்கியவர், முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்திவருபவர், பதிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பவா செல்லத்துரை இந்த ஆவணப்படம் பவாவின் கதை …

பவா கதை சொல்கிறார் Read More »

சலுகை விலையில்

நான் நிகழ்த்திய உலக இலக்கிய பேருரைகளின் ஏழு டிவிடிகளும் இப்போது 20 % தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த டிவிடியில் எனது உரையோடு தொடர்புடைய திரைப்படத்தின் தேர்வு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணைக்கபட்டுள்ளது, ஒரு டிவிடி ஒன்றரை மணிநேரம் ஒடக்கூடியது, ரூ 700 மதிப்புள்ள ஏழு டிவிடிகளின் மொத்த விலை  தற்போது ரூ 560 , டிஸ்கவரி புக் பேலஸ் அறிவித்துள்ள  இந்தக் குறுகிய காலச் சலுகையை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். உலக இலக்கியப்பேருரைகள் 1.         ஹெமிங்வேயின் “கிழவனும் …

சலுகை விலையில் Read More »

புதிய சிறுகதை தொகுதி,

காந்தியோடு பேசுவேன் எனது புதிய சிறுகதை தொகுதி, இந்த தொகுப்பின் விஷேசம் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய் என மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கையை கதைகளின் பின்புலமாக்கி எழுதியிருக்கிறேன், ஆங்கிலோ இந்தியப்பெண், உலகத்திரைப்படவிழா, இசைதட்டின் முள்ளாக மாறிய ஒருமனிதனின் வாழ்க்கை, பாம்பு பிடாரனின் மகள் என மாறுபட்ட கதைக்களன்களுடன் புதிய கதை சொல்லும் முறையில் இக்கதைகள் புனைவின் முடிவற்ற சாத்தியங்களை நோக்கி நகர்கின்றன உயிர்மை வெளியாடாக இந்த நூல் டிசம்பர் 8ல் வெளியாகிறது **