admin

திருச்சியில்

திருச்சியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜான் வெஸ்லி பள்ளி மைதானத்தில் ரோட்டரி கிளப் நடத்தும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் நாளை மாலை (13.02.14) ஆறுமணிக்கு நான் உரையாற்றுகிறேன் மாலை 5மணி முதல் உயிர்மை புத்தகக் கடையில் இருப்பேன்,  (உயிர்மை ஸ்டால் எண் 53.) சந்திக்க விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன் ***

தோக்கியோ சுவடுகள்3

இரண்டாம் நாளின் மாலையில் முழுமதி அறக்கட்டளையோடு தொடர்புடைய பல்வேறு துறையைச் சேர்ந்த நண்பர்கள் அனைவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது ஒரு உற்சாகமான சந்திப்பு . நிமித்தம் நாவல், மற்றும் எனது படைப்புகள் பற்றித் துவங்கி மெல்ல கிளைவிட்டு,  பிள்ளைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பது தேவையா, ஆங்கில வழிக்கல்வி சரியானதா, தீவிர இலக்கியம் ஏன் புரியவில்லை, தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படியிருக்கும், பௌத்தம் ஏன் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தது. அம்பேத்காரின் சிந்தனைகள் குறித்த பார்வைகள், …

தோக்கியோ சுவடுகள்3 Read More »

தோக்கியோ சுவடுகள் 2

தோக்கியோவில் இருந்து ஒரு மணி நேரப்பயணத்தில் உள்ளது காமகுரா, அங்கே பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று வெட்டவெளியில் அமைக்கபட்டிருக்கிறது, 13.35 மீட்டர் உயரமுள்ள வெண்கல புத்தரின் சிலையது, (Kamakura Daibutsu) ஜப்பானின் தேசிய அடையாளங்களில் ஒன்று அந்தப் புத்தர், 1252ம் ஆண்டு அதைச் செய்திருக்கிறார்கள், ஜப்பானில் உள்ள இரண்டாவது பெரிய புத்தர் சிலை இதுவே, முதற்சிலை நாராவில் உள்ளது, ஆகவே பிரம்மாண்டமான புத்தனைக் காண்பதில் இருந்து பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்து கொண்டு வெளியே வந்தபோது …

தோக்கியோ சுவடுகள் 2 Read More »

தோக்கியோ சுவடுகள் 1

இலவம்பஞ்சு பறப்பது போலக் காற்றில் பனி விழுந்து கொண்டிருந்தது. மூன்று அடுக்கு குளிராடைகளைத் தாண்டி குளிர் உடலை நடுக்கிக் கொண்டிருந்தது, கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடியே பனிப்பொழிவை பார்த்துக் கொண்டிருந்தேன், சகுரா எனப்படும் பூக்கள் மலர்கிற காலத்தில் ஜப்பானைக் காண வேண்டும், அது பேரழகானது என்றார்கள், அன்று பனி, வானெங்குமிருந்து பூக்கள் உதிர்வதைப் போலவே இருந்தது கரிசலின் வெயில் குடித்து வளர்ந்த சிறுவன் நான், இது போன்ற பனிப்பொழிவைக் காண்பது எனக்கெல்லாம் புது அனுபவம், வெளிநாட்டுப் பயணத்தில் …

தோக்கியோ சுவடுகள் 1 Read More »

ஜப்பான் பயணம்

ஜனவரி முப்பது முதல் பிப்ரவரி ஏழு வரை ஜப்பான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன், இதில் டோக்கியோவில் நடைபெற உள்ள இலக்கியவிழாவில் கலந்து கொள்கிறேன். ஜப்பானில் வசிக்கின்ற தமிழர்கள் நடத்தும்  பொங்கல் கொண்டாட்ட நிகழ்விது, இதனை முழுமதி கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பு செய்கிறது. **

அ. முத்துலிங்கம்

கோவையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ்  என்ற இலக்கிய நிகழ்விற்காகக் கனடாவில் இருந்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆற்றியுள்ள உரையின் காணொளியை இணையத்தில் பார்வையிட்டேன் , இந்தக் காணொளியில் முத்துலிங்கம் மிகவும் அற்புதமாகப் பேசியிருக்கிறார். அவர் சொல்லும் தமிழ் அகதியின் கதையும் , ஆறுமணி சிட்டுக்குருவியும் மனதைத் தொடுகிறது. https://youtu.be/O3_ZJ6U9zNw KOVAIMUTTUSPEECH

சாரல் விருது

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு 2014 ஆம் ஆண்டின் சாரல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. சிறந்த எழுத்தாளர்களைத் தேடிக் கௌரவிக்கும் ஜேடி ஜெர்ரி இருவரும் பாராட்டிற்குரியவர்கள் கவிஞர் விக்கிரமாதித்யன்  பதினாறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளும், இரண்டு சிறுகதை தொகுப்பும், ஏழு கட்டுரை தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். அண்ணாச்சிக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் ••

சிற்றிதழ்கள்

வலசை, மந்திரச் சிமிழ் என்ற இரண்டு முக்கியமான சிற்றிதழ்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கின்றன,  தொடர்ந்து  தீவிரமான இலக்கியப்பங்களிப்பு செய்து வரும் முக்கியமான சிற்றதழ்கள் இவை. இரண்டும் காத்திரமான உலக இலக்கியப்படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதுடன் மாற்று அரசியல், கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் நடைபெறும் முக்கியச் சிந்தனைப்போக்குகள், நேர்காணல்கள் என விரிந்த அளவில் தனிக்கவனத்துடன் நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கபட்டுள்ளன,  தன்னலமற்ற உழைப்பும் தீவிர அக்கறையும் கொண்டவை இந்தச் சிற்றிதழ்கள், வலசை இதழை கொண்டு வந்திருக்கும்  நண்பர்கள் …

சிற்றிதழ்கள் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் எந்த அரங்கில் கிடைக்கின்றன என்பது குறித்தும் இந்த புத்தகக் கண்காட்சியில் என்ன புதிய புத்தகங்கள் வாங்கலாம்  என்றும்  நண்பர்கள்  பலர் தொடர்ந்து  மின்னஞ்சலில் கேட்டு வருகிறார்கள்,அவர்களுக்காக எனது பரிந்துரை, இது கடந்த நான்கு நாட்களில் புத்தக கண்காட்சியில் சுற்றித் தேர்வு செய்தவை,  இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொள்ளவும் ••• 1) ஒநாய் குலச்சின்னம்  -ஜியாங் ரோங் -தமிழில் சி மோகன், அதிர்வு வெளியீடு, முக்கியமான மொழியாக்க நாவல் 2) …

புத்தகக் கண்காட்சியில் Read More »

SHIRLEY’S LIKE THAT

எனது ஷெர்லி அப்படித்தான் சிறுகதையை நண்பர் கமல்நாத் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார், அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. இக்கதை  உயிர்மை வெளியிட்டுள்ள எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதைத்தொகுபபில் உள்ளது ••• SHIRLEY’S LIKE THAT Calling bell’s chime heard. Shirley Frank was standing at the doorstep. The scent of the lavender perfume that she was wearing had entered before her. She should be the …

SHIRLEY’S LIKE THAT Read More »