நிமித்தம் விழா
நேற்று எனது புதிய நாவல் நிமித்தம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவில் தோழர் டி. லட்சுமணன் நாவலை வெளியிடதென்னக ரயில்வே உயர்அதிகாரி இளங்கோவன் அதைப்பெற்றுக் கொண்டார், எழுத்தாளர் சா. கந்தசாமி சிறப்புரை ஆற்றினார், மாற்றுதிறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவராகச் செயல்பட்டு வரும் தோழர் டி.லட்சுமணன் தனது களஅனுபவங்களின் பின்புலத்தைக் கொண்டு நாவலை வாசித்து ஆற்றிய உரை முக்கியமானது, எளிமையும் நேர்மையும் கொண்ட அவரது உரை மிகுந்த வரவேற்பை பெற்றது தென்னக ரயில்வே உயரதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் …