admin

புதிய நாடகம்

சிந்துபாத்தின் மனைவி என்ற எனது புதிய நாடகத்தினை தியேட்டர்  லேப் குழுவின் ஜெயராவ் வருகின்ற 14 ம் தேதி இரவு 7 மணிக்கு கே.கே.நகரில் உள்ள தியேட்டர் லேப் அரங்கில் நிகழ்த்த இருக்கிறார், அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• இடம்                Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai, K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. ) Ph.9688858882 நாள் : 14.09.2013. சனிக்கிழமை, நேரம் …

புதிய நாடகம் Read More »

தாயின் குரல்

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார். (2.7.1961) இணையத்தில் மறுபிரசுரம் கண்ட அந்த இணைப்பை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார், அதன் மீள்பதிவு இது ••• விருதுநகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது. அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் …

தாயின் குரல் Read More »

குழந்தைகள் புத்தகங்கள்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, எனும் இரண்டு சிறுநாவல்கள், கிறுகிறுவானம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Whirling Swirling Sky ,ஆலீஸீன் அற்புத உலகம் நூலின் புதிய பதிப்பு, என நான்கு புத்தகங்கள் மதுரையில் வெளியிடப்பட இருக்கின்றன நண்பர் பவா.செல்லதுரையின் வம்சி பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த வெளியீட்டு விழா செப்டம்பர் 6 மாலை 6.30 மணி அளவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிரில் உள்ள நார்த் கேட் ஹோட்டலின் அரங்கில் நடைபெற உள்ளது தோழர் …

குழந்தைகள் புத்தகங்கள் Read More »

பாராட்டிற்குரியவர்கள்

கடந்த ஒரு வாரத்தின் முன்பாக மதுரையில் நடைபெற்ற விருட்சத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது குறித்து நண்பர்கள் பலரும் என்னிடம் தெரிவித்தார்கள், நானும் அதில் கலந்து கொள்ள விரும்பியிருந்தேன், ஆனால் வேறு ஒரு முக்கியப்பணியின் காரணமாக சேலம் சென்ற காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த விருட்சத்திருவிழா  களமாக அமைந்திருந்தது என்று பல பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், இதனை சாத்தியமாக்கிய நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்த இந்த …

பாராட்டிற்குரியவர்கள் Read More »

நாடகப் புத்தகங்கள்

மதுரையில்  இன்று (31.08.2013 ) நடைபெறுவதாக இருந்த எனது இரண்டு நாடகப் புத்தகஙகளின் வெளியீட்டு விழா  தள்ளிவைக்கபட்டுவிட்டது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கயல்கவின் பதிப்பகம் முறையான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் போனதால் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இரண்டு நாடகப்புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும் இடம், நாள் பின்னர் அறிவிக்கபடும். ••••

எழுத்துலகின் சாமுராய்

இரண்டாம் உலகயுத்தம் ஜப்பானுக்கு ஏற்படுத்திய அடி மிகவும் வலிமையானது, அதன் பாதிப்பில் இருந்து இன்றும் அவர்களால் முழுமையாக விடுபடமுடியவில்லை, ஜப்பானிய இலக்கியத்திலும் யுத்தகாலத்திற்குப் பிந்தைய எழுத்தில் நிறைய மாற்றங்கள் உருவாகின, குறிப்பாக மிஷிமாவும் கவாபதாவும் கோபே அபேயும், புமிகோவும் முக்கிய நவீன எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள், இவர்களில் யாசுனாரி கவாபதா நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, யுகியோ மிஷிமா (Yukio Mishima) இரண்டு முறை நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டவர், அரசியல் நிலைப்பாடு காரணமாகவே அவருக்கு …

எழுத்துலகின் சாமுராய் Read More »

அழைப்பிதழ்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ள எனது நாடகப் புத்தகங்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

ஒண்டிக்கட்டை

சிறுகதை. மாக்ஸிம் கார்க்கி தமிழில் பாஸ்கரன் எனக்கு பிடித்தமான மாக்சிம் கார்க்கியின் கதையிது, ருஷ்யச் சிறுகதைகள் நூலில் இருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது ••• ஏழைகளைப்  புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு …

ஒண்டிக்கட்டை Read More »

மொசில்லா தமிழ் உலாவி

மொசில்லா பயர்பாக்ஸ்  உலாவி முழுமையாகத் தமிழில் உருவாக்கபட்டுள்ளது இதனை தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, ஆர்வம் மிக்க இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சாதித்துக் காட்டி அரிய சாதனை செய்துள்ளது, புதிய தமிழ் மொசில்லா பயர்பாக்ஸ் உலாவியின் வெளியீட்டுவிழா  ஆகஸ்ட் 20, செவ்வாய்கிழமை, மாலை ஆறுமணிக்கு மைலாப்பூர் சிவகாசி பெத்தாச்சி அரங்கில் நடைபெற உள்ளது, அதில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொள்கிறேன் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

டபுலிஸ்தான்

Vive la France  என்ற பிரெஞ்சு படத்தை நேற்றிரவு பார்த்தேன்,  மிகச்சிறந்த நகைச்சுவைபடமிது, Taboulistan என்றொரு கற்பனையான நாடு, உலக நாடுகள் யாரும் தன்னைக் கண்டுகொள்ளவேயில்லை, தங்களின் பாராம்பரிய Tabbouleh  உணவு  பற்றி ஒருவரும் அறிந்திரு க்கவில்லை, அதை லெபனான் உணவு என தவறாக கூறுகிறார்கள்  என அந்த நாட்டு சர்வாதிகாரிக்குப் பெரிய ஆதங்கம், அதனால்  உலகின் கவனத்தை ஈர்க்க commercial terrorism என்ற முறையைக் கையாள முடிவு செய்கிறார் அதாவது ஒரு தற்கொலைப் படையை அனுப்பி …

டபுலிஸ்தான் Read More »