சிறார்களுக்காக நான் எழுதியுள்ள சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, எனும் இரண்டு சிறுநாவல்கள், கிறுகிறுவானம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Whirling Swirling Sky ,ஆலீஸீன் அற்புத உலகம் நூலின் புதிய பதிப்பு, என நான்கு புத்தகங்கள் மதுரையில் வெளியிடப்பட இருக்கின்றன
நண்பர் பவா.செல்லதுரையின் வம்சி பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த வெளியீட்டு விழா செப்டம்பர் 6 மாலை 6.30 மணி அளவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிரில் உள்ள நார்த் கேட் ஹோட்டலின் அரங்கில் நடைபெற உள்ளது
தோழர் எஸ்.ஏ.பெருமாள், டாக்டர் எஸ்.வெங்கடாசலம், எஸ்.கே.பி.கருணா, துளசிதாசன், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் உதயசங்கர், இசைஅறிஞர் மம்முது, மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், பேராசியர் ஜெயகரன், மொழிபெயர்ப்பாளர் கீதா, ஷைலஜா. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்
புத்தகங்களை குழந்தைகள் தீபா, சௌந்தர்யா, ஸ்ரீவிஷால், மாதவன் ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்
